குரூப்2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது?
சென்னை: தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.இது தவிர, வனப் பயிற்சியாளர், உதவி பிரிவு அலுவலர், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்ட கல்வி அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், நூலகர், வேளாண் அலுவலர், புள்ளியியல் துறை போன்ற காலிப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.