20ம் தேதி உங்களுக்கு வேலை கிடைக்கும்
கோவை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது.காலை 10:00 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இம்முகாம் நடக்கிறது.10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். பயோ டேட்டா, கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.