200 முறை தேர்வு எழுதுங்கள்
ஒவ்வொரு மாணவரும் தேர்வுகளில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சிறந்து விளங்க, 'வலுவான அடித்தளம்' பேருதவி புரிகிறது.ஒவ்வொரு பாடத்திலும் வலுவான அடித்தளத்தை உருவாக்கவும், ஆழமான புரிதலை உறுதி செய்யவும், வாராந்திர தேர்வுகள், முழுமையான தேர்வுகள் மற்றும் பகுதி தேர்வுகள் என, 200க்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுதி பயிற்சி பெற வேண்டும். மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்து திறன் வளர்க்க இத்தேர்வுகள் உறுதுணையாக அமையும்.பாடம் கற்பிக்கும் தோல்விஇரண்டாவது முக்கிய அம்சம் சரியான மனநிலையை கொண்டிருத்தல்; குறிப்பாக, தோல்வியும் ஒரு சிறந்த பாடத்தை கற்றுக் கொடுப்பதால், மாணவர்கள் தங்கள் தோல்விகளை புரிந்துகொள்ள வேண்டும்.குழந்தைகள் பெரும்பாலும், 'அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும்' என்ற மனநிலையிலேயே வளர்க்கப்படுகின்றனர். இதனால், தேர்வில் சிறந்து விளங்காதபோது அவர்கள் எதிர்மறையான, மனஅழுத்தம் நிறைந்த நிலைக்கு செல்லக்கூடும்.இதற்குபதிலாக, 'தேர்வு தங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது; அதன் முடிவு என்ன மற்றும் தோல்விகளில் இருந்து எவ்வாறு முன்னேறுவது' என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மனஅழுத்தம் தணிக்க மூச்சு பயிற்சிகள் மற்றும் குறிப்பு எழுதுதல் போன்ற நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.தங்கள் குழந்தைகளின் லட்சியங்கள் மற்றும் விருப்பங்களை பெற்றோரும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.விழிப்புணர்வு தேவைஏ.ஐ.,யை எந்த அளவிற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். உதாரணமாக, மூன்று பாடப்பகுதிகளை கொண்ட ஒரு தேர்வுக்கு தயாராகும் மாணவர், அப்பகுதிகளை பகுப்பாய்வு செய்யவும் வரக்கூடிய கேள்விகளை யூகிக்கவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம்.தேசிய கல்விக் கொள்கையானது மதிப்பெண்களுக்கு மட்டுமல்லாது, முழுமையான கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது; தாய்மொழியை புரிந்துகொண்டு கற்றல், கட்டாய வாழ்க்கைத்திறன் செயல்பாடுகள், 'ரோபோட்டிக்' ஆய்வகங்கள் மற்றும் கட்டாய யோகா ஆகியவை இதன் வரவேற்கத்தக்க அம்சங்கள்.ஏ.ஐ.,யால் மிஞ்ச முடியாதுசெயற்கை நுண்ணறிவால் மனித அறிவையோ அல்லது படைப்பாற்றலையோ மிஞ்ச முடியாது! -ஷரணி பொன்குரு, இயக்குநர், நாராயணா கல்வி நிறுவனங்கள்