உள்ளூர் செய்திகள்

2014ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் - கல்வி தொடர்பான நிதி ஒதுக்கீடுகள்

மத்திய பட்ஜெட்டில் பல்வேறான பிரிவுகளில், கல்விக்கென்று நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை, * மதிய உணவுத் திட்டத்திற்கு, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * சர்வ சிக்சா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,250 கோடி ஒதுக்கீடு * நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பான முறையில் மறுநிர்மாணம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அதற்கான குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.கல்வித்துறை தொடர்பான இதர அறிவிப்புகள் * வேலை வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கும் திறன் இந்தியா திட்டம்(Skill India Programme) விரைவில் அறிமுகம் * நாட்டிலுள்ள அனைத்து மகளிர் பள்ளிகளிலும், தேவையான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் * பெண் குழந்தைகளின் கல்விக்கான, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு * பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் * ஹிமாலயன் படிப்புகளுக்கான தேசிய மையத்தை உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு * ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும் * தெலுங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் புதிய தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும் * நாட்டின் இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்பை வளர்க்கும்பொருட்டு, இளம் தலைவர்கள் திட்டத்தை(Young Leaders Programme) உருவாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு * மணிப்பூர் மாநிலத்தில் புதிதாக விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு * எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு * வெகு விரைவில், நாட்டில், தேசிய விளையாட்டு ஆணையம் அமைக்கப்படுவதோடு, காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையங்களும் உருவாக்கப்படும் * ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 4 எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * உயர்கல்விக்கான வங்கிக் கடன் பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். * ரூ.30 கோடியில் பள்ளி மதிப்பாய்வு திட்டம் தொடங்கப்படும். * அசாம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், வேளாண் மற்றும் விவசாய தொழில்நுட்பத்திற்கான 2 புதிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். * அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2 ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படும் * பெங்களூர் மற்றும் ஹரியானாவின் பரிதாபாத்தில், 2 புதிய பயோடெக்னாலஜி கொத்துக்கள்(clusters) தொடங்கப்படும். * பள்ளிப் பாடத்திட்டமானது பாலின முக்கியத்துவம் குறித்த ஒரு தனி அத்தியாயத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்ற செயல்திட்டம். * சுங்கம் மற்றும் கலால் துறை தொடர்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு தேசிய கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படும். * வேலைவாய்ப்பு பதிவு மையங்கள், கேரியர் மையங்களாக மாற்றப்பட்டு, தகவல் மற்றும் ஆலோசனை உதவிகள் வழங்கப்படுவதற்கான திட்டம். * பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம், நானோடெக்னாலஜி துறைக்கான 5 தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் வலுப்படுத்தப்படும் * நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும் * புனேவிலுள்ள எப்.டி.ஐ.ஐ., கொல்கத்தாவிலுள்ள எஸ்.ஆர்.எப்.டி.ஐ., ஆகியவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக தரம் உயர்த்தப்படும். * முஸ்லீம் மத கல்வி நிறுவனமான மதரஸாக்களை நவீனமாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு * லோக் நாயக் ஜெய்ப்பிரகாஷ் நாராயண் பெயரில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு உயர்மதிநுட்ப மையம்(Centre of Excellence) அமைக்கும் திட்டம் * ஆசிரியர் பயிற்சிக்கான மதன் மோகன் மாளவியா திட்டம் * பருவநிலை மாற்றத்தைப் பற்றி ஆய்வுசெய்ய புதிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் * பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன், கைவினைக் கலைகள் தொடர்பான ஹஸ்ட்கலா அகடமியை மேம்படுத்த திட்டம் * சமூக ரேடியோ மையங்களுக்கு(Community Radio Centres), ரூ.100 கோடி ஒதுக்கீடு * தேசிய கிராமப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்