உள்ளூர் செய்திகள்

203 செவிலியர் பணியிடங்களுக்கு 25க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: "காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் 203 செவிலியர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், அதற்கு வரும் 25ம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும்," என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் காரப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள 203 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் 203 செவிலியர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நிர்வாக செயலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42ஏ, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்