21ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு தொழில்திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து வரும் 21ம் தேதி காலை 9:30 மணியளவில், திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனங்கள் பங்கு கொள்ளும் வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. அது சமயம் பிரபல நிறுவனங்கள் பங்கேற்று எட்டாம் வகுப்பு தேர்ச்சி, எஸ்.எஸ்.எல்.சி., எச்.எஸ்.சி (2), ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த மாணவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வயது 18 முதல் 30 வரை தோந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியத்துடன் இதரப்படிகளும் வழங்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.