2,130 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்
சென்னை, திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், லேப்- டாப் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, திருவள்ளூரில் இன்று நடக்கிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, லேப்- டாப் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும், 2,130 மாணவ, மாணவியருக்கு, லேப்- டாப் வழங்கப்படுகிறது. மாவட்ட வாரியாக இன்று வழங்கப்படவுள்ள, லேப்-டாப் விவரம்: திருநெல்வேலி - 128, தூத்துக்குடி - 100, கன்னியாகுமரி - 140, திருவள்ளூர் - 119, காஞ்சிபுரம்-173, கோவை - 127, நீலகிரி - 48, திருப்பூர் - 158, ஈரோடு - 177, பெரம்பலூர் - 74, சேலம் - 74, திருவண்ணாமலை - 177, விருதுநகர் - 40, தஞ்சாவூர் - 67, திருவாரூர் - 48, சிவகங்கை - 26, அரியலூர் - 23, கடலூர் - 55, விழுப்புரம் - 34, வேலூர் - 110, தர்மபுரி - 55, நாமக்கல் - 43, கிருஷ்ணகிரி- 34, திண்டுக்கல் - 52, தேனி - 48. சென்னை , கரூர், ராமநாதபுரம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில், லேப்-டாப் வழங்குவது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. தனியார் நிறுவனங்களிடமிருந்து, தேவையான, லேப்-டாப்கள் கிடைத்ததும், இந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.