சந்திரயான்3: ஒத்திகை நிறைவு!
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை நிறைவடைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஜூலை 14ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய சந்திரயான் 3 தயாராக உள்ளது.நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்- 3 விண்கலம், வரும் 14ம் தேதி மதியம் 2:35 மணிக்கு அனுப்பப்பட உள்ளது. சில தினங்களுக்கு முன், நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுத்தளத்துக்கு சென்றடைந்தது.மேலும் சந்திரயான்-3 ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விண்ணில் செலுத்துவதற்காக ஒத்திகை நேற்று(ஜூலை 11) நடந்தது. சந்திரயான்-3 விண்கலத்தின் ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், திட்டமிட்டபடி ஜூலை 14ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்தது.