உள்ளூர் செய்திகள்

38,855 மாணவருக்கு காலை உணவு அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை : மாவட்டத்தில் 1059 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 38,855 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டி ஸ்ரீபணிச்சாருடையவர் தரும கலாசாலை நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.திட்டத்தை துவக்கி அமைச்சர் பேசியதாவது:கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் விதத்தில், முதல்வர் இத்திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.சிவகங்கையில் 113 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5287 மாணவர்கள் காலை உணவு பெறுகின்றனர். மாவட்ட அளவில் 1059 அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 38,855 மாணவர்கள் பயன்பெறுகின்றனர் என்றார்.விழாவில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன், கலெக்டர் பி.ஏ.,(சத்துணவு) மல்லிகா, பள்ளி செயலர் சிதம்பரம், தாசில்தார் மாணிக்கவாசகம், தலைமை ஆசிரியர் மகாலிங்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்