ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவ கல்லுாரி தொடங்கப்படும்
ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கு பகுதியில் உள்ள சி.எம்.சி., மருத்துவமனை கிளையில், மேம்படுத்தப்பட்ட மரபணுவியில் மையத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ராணிப்பேட்டை உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.ராணிப்பேட்டை மாவட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.த.வெ.க., ஆட்சி அமைந்து, ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், மாநிலத்தின் சில மாவட்டங்களில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறைபாடுகள் படிப்படியாக சரிசெய்யப்படும்.வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனைகளில் அடுத்த, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்.மாநிலம் முழுதும், '108' ஆம்புலன்ஸ் சேவைக்கான ஒப்பந்தம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.