உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் 11 ஆண்டுகளில் கல்விக்காக ரூ.21,000 கோடி முதலீடு

கோஹ்பூர்: ''கடந்த, 11 ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களில் கல்விக்காக மத்திய அரசு, 21 ,000 கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு மாநிலமான அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள போலகிரியில், புதிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பல்கலை உருவாக உள்ளது.மொத்தம், 241 ஏக்கர் பரப்பளவில், 7 லட்சம் சதுர அடியில், 415 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும், ஸ்வாஹித் கனகலதா பருவா பல்கலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அடிக்கல் நாட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றது முதல் வடகிழக்கு பகுதியில் கல்வித் துறைக்காக, 21 ,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 850க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்துள்ள-து.மேலும், 200க்கும் மேற்பட்ட புதிய திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நாட்டின் முதல் விளையாட்டு பல்கலையும் இந்த பகுதியில் உருவாகி உள்ளது. அசாமில் மட்டும், 15 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தெற்காசியாவின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையம் இங்கு உருவாகியுள்ளது.இங்கு, இரண்டாவது ஐ.ஐ.எம்., எனப்படும் மேலாண்மை உயர்கல்வி நிறுவனம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகளை மேம்படுத்துவதுடன், விமான போக்குவரத்து மற்றும் ரயில்வே துறைகளிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் 10 புதிய பசுமை விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. நாட்டின் ரயில்வே வரைபடத்தில், முதன்முறையாக மணிப்பூர் மற்றும் மேகாலயா இணைக்கப்பட்டுள்ளன.சுதந்திர போராட்ட வீரர் கனகலதா பருவா பெயரில் புதிய தொழில்நுட்ப பல்கலை வடகிழக்கு பகுதியில் துவங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பல்கலை எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த வழி காட்டியாக விளங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்