உள்ளூர் செய்திகள்

குரூப் 1 முதல்நிலை தேர்வு 2,999 பேர் எழுதினர்

திருப்பூர்: உதவி கலெக்டர், மாவட்ட பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. 'குரூப் 1' முதல் நிலை தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.திருப்பூரில் விவேகானந்தா பள்ளி, டெர்ப்ஸ் கல்லுாரி, எல்.ஆர்.ஜி. கல்லுாரி, குமரன் கல்லுாரி, செயின்ட் ஜோசப் கல்லுாரி, ஏஞ்சல் கல்லுாரி, ஏ.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கே.எஸ்.சி. பள்ளி, பழனியம்மாள் பள்ளி, பிரன்ட்லைன் பள்ளி ஆகிய 10 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 9:30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12:30 மணிக்கு முடிந்தது.திருப்பூர் மாவட்டத்தில் 4,104 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில் 2,999 பேர் தேர்வு எழுதினர். 1,105 பேர் தேர்வுக்கு வரவில்லை.டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 1' முதல் நிலைத்தேர்வு நடந்ததையொட்டி, கே.எஸ்.சி. பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்