பட்டம் வளர்த்த வாசிப்பு ஆர்வம்
அவிநாசி: மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் சார்பில், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியுடன் இணைந்து 'பதில் சொல்; பரிசை வெல்' மெகா வினாடி--வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றன. இதன் ஒரு பகுதியாக அவிநாசி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டி நடந்தது. 130 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் 9ம் வகுப்பு மாணவிகள் வைஷ்ணவி, ரித்திகா முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஜெயந்தி சேகர் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் பரிசுப் பொருட்களை வழங்குகின்றன.தேர்வுக்குப் பயன்தினமலர் 'பட்டம்' இதழை தவறாமல் படித்து வருகிறேன். அதிலிருந்து குறிப்புகள் எடுத்து வைத்துள்ளேன். அதில் வரும் தகவல்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக பயனுள்ளதாக உள்ளது.- வைஷ்ணவி, மாணவி.தகவல்கள் சிறப்புமுதலில் 'பட்டம்' இதழ் பற்றி தெரியாது. தற்போது பள்ளியில் நாள்தோறும் படிப்பதால் குறிப்பு எடுத்து தேர்வுக்கும், பொது அறிவு போட்டிக்கும் தயாராகிறேன். கணக்கு, அறிவியல், கணினி அறிவியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.- ரித்திகா, மாணவி.பாராட்டுக்குரிய கல்விப்பணிநுாலகத்தின் பொது அறிவு புத்தகத்தை விட தினமலர் 'பட்டம்' இதழில் கேள்விகள் மிகவும் நுணுக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது. இதனால் மாணவர்களின் செய்தித்தாள் வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டாக 'பட்டம்' இதழை பள்ளியில் வாங்கி வருகிறோம். 'தினமலர்' நாளிதழின் கல்விப்பணி பாராட்டுக்குரியது.- ஜெயந்தி சேகர், பள்ளி தாளாளர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, சத்யா ஏஜென்சி நிறுவனம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹப் இணைந்து வழங்கும் 'பட்டம் 2026 - 27 வினாடி வினா போட்டி', அவிநாசி, அடுத்த அ.குரும்பபாளையம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.