உள்ளூர் செய்திகள்

400 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது நேர்கோட்டில் சனி, வியாழன் கோள்கள்

கொடைக்கானல்: நானுாறு ஆண்டுகளுக்கு பின் நாளை(டிச.,21) சனி, வியாழன் கோள்கள் ஒரே நேர்கோட்டில்(கோ ஜங்ஷன்) வரும் அரிய வானியல் நிகழ்வை காண கொடைக்கானல் வானியியற்பியல் மையத்தில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வு இதற்கு முன்பு 1623ம் ஆண்டில் நிகழ்ந்தது. இதுபற்றி கொடைக்கானல் வானியியற்பியல் மைய விஞ்ஞானி எபினேசர் கூறுகையில், &'&'இந்நிகழ்வை மேற்கு திசையில் வெறும் கண்களால் காணலாம். நாளை மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரைதொலைநோக்கி மூலம் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பகலில் ரூ.20, இரவில் ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிகழ்வால் சீதோஷ்ண நிலை மாற்றம் அல்லது பூமி சார்ந்த எவ்வித பாதிப்புகளுக்கும் வாய்ப்பில்லை&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்