உள்ளூர் செய்திகள்

44 நிகர்நிலைப் பல்கலை அங்கீகாரம் ரத்து மறுபரிசீலனை

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் குறித்து தாண்டன் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையின் படி 44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்து புதிதாக ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும், 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் விளக்கம் கேட்டு புதிதாக நோட்டீஸ் அனுப்பப்படும். என்ன காரணங்களுக்காக அவர்களால் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதை அறிந்து அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று அட்டார்னி ஜெனரல் வாகன்வதி தெரிவித்தார். இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும் நோட்டீஸ் அளித்தும் அதற்க்கு பதில் அளிக்க இரண்டு வார காலம் அவகாசம் அளிக்கப்படும். பல்கலைக்கழகங்கள் அனுப்பும் விளக்கங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து ஏப்ரல் 23-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதுவரை அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை அடுத்த ஆணை பிறப்பிக்கும் வரை நீடிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அடுத்த விசாரணை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்