5 பதக்கங்களை வென்ற சென்னை மாணவர்
சென்னை: எம்.பி.பி.எஸ்., படிப்பில் சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் சுதர்சன், மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவி தஹ்சின் நீலோபர் ஆகியோர் ஐந்து பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர் சுதர்சன், எம்.எஸ்., (பொது அறுவை சிகிச்சை) படிப்பில் மூன்று தங்க பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றார். மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவி தஹ்சின் நீலோபர், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மூன்று தங்க பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் பயீஸ் முகமது அலி மருந்தியல் படிப்பில், இரண்டு தங்க பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.