51 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி சத்துணவு சமையலர் அசத்தல்
கரூர்: கரூரில் 51 வயதில் சத்துணவு சமையலர் 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் ஷாகிலாபானு, 51. கடந்த, 12 ஆண்டுகளாக சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து வந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதினார். இதில், இரண்டு பாடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் கடந்த 3ல் துணை தேர்வு எழுதி இருந்தார்.இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழ் - 35, கணிதம் - 35, அறிவியல் - 48 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த, 12 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வந்த நிலையில், சத்துணவு அமைப்பாளராக பதவி உயர்வுக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், கடுமையாக முயற்சி செய்து படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.