9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம்
கர்நாடகா: எட்டாம் வகுப்பு வரையிலான மாணவகளுக்கு வழங்கும் மதிய உணவுத் திட்டம் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.* பள்ளி கல்வி, சிறார்களின் மனம், அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நோக்கத்துக்கு எதிராக, பள்ளி பாடப் புத்தகங்களில், பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இவைகள் நடப்பு ஆண்டிலிருந்து நீக்கப்படும்.* அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை தரம் உயர்த்த 310 கோடி ரூபாய்; பி.யு.சி., கல்லுாரிகளின் வகுப்பறைகளுக்கு, 240 கோடி ரூபாய் என, 550 கோடி ரூபாய் செலவில் 8,311 வகுப்பறைகள் கட்டப்படும்.* மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, குறைந்த அளவில் கழிப்பறைகள் உள்ள 5,775 பள்ளிகள், 150 கல்லுாரிகளில் கழிப்பறைகள் கட்டப்படும். இதற்காக 200 கோடி ரூபாய் செலவிடப்படும்.* பழைய பள்ளி, கல்லுாரி கட்டடங்கள், மழையினால் சிதிலமடைந்த 3,833 பள்ளிகள், 724 பி.யு.சி., கல்லுாரிகளின் வகுப்பறைகள் கட்டப்படும். இந்த பணிகளுக்கு 100 கோடி ரூபாய் செலவிடப்படும்.* அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளின் நிர்வகிப்புக்கு, வழங்கும் நிதியுதவியை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 45 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, 47 ஆயிரத்து 272 பள்ளிகள் மற்றும் 1,231 பி.யு.சி., கல்லுாரிகளின் நிர்வகிப்புக்காக, 150 கோடி ரூபாய் வழங்கப்படும்.* அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மதிய உணவுடன் வாரத்தில் ஒருநாள் முட்டை / கடலை மிட்டாய் / வாழைப்பழம் வழங்கப்பட்டது. இனி வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்கப்படும். இது 9வது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.* கர்நாடகாவின் 33 லட்சம் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க 80 கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுக்கப்படும். கல்வியில் பின்தங்கிய, 1.50 லட்சம் மாணவர்களை, உயர்நிலைப்பள்ளி தேர்வுக்கு தயாராக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.* பள்ளிக்கல்வித் துறையின், வெவ்வேறு திட்டங்களை நிர்வகிக்கும், சாட்ஸ் 2.0 தொழில்நுட்பம் தரம் உயர்த்தப்படும்.* தொடக்க பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகளில், &'இன்னோவேஷன் லேப்&'கள் அமைக்கப்படும். 2023 - 24ம் ஆண்டில், 2 கோடி ரூபாய் செலவில், நான்கு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.* கல்வித்துறை, வனத்துறை ஒருங்கிணைப்பில், இட வசதியுள்ள பள்ளிகளை சுற்றிலும், ஓராண்டில் 50 லட்சம் செடிகள் நடப்படும்.* அரசின் பொது நூலகங்களுக்கு, சிறந்த புத்தகங்கள் வாங்க, நடப்பாண்டு 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.