உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இறங்கி வர மறுக்கும் பழனிசாமி; தொடருது செங்கோட்டையன் அதிருப்தி

இறங்கி வர மறுக்கும் பழனிசாமி; தொடருது செங்கோட்டையன் அதிருப்தி

சென்னை: வெளிப்படையாக தன் கருத்தைக் கூறிய பிறகும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டு கொள்ளாமல் இருப்பதால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அதிருப்தி தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.முதல்வராக இருந்த போது, அத்திக்கடவு -- அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கடந்த 9ம் தேதி கோவை அன்னுாரில் பாராட்டு விழா நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=twesawyz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழா மேடை மற்றும் விளம்பரங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி, அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன் இந்த விழாவை புறக்கணித்தார்; இதை வெளிப்படையாகவும் தெரிவித்தார்.

கொம்பு சீவினர்

பொதுவெளியில் உள்கட்சி விவகாரங்களை, வெளியில் பேசும் வழக்கம் இல்லாதவர் என்பதால், செங்கோட்டையனின் புறக்கணிப்பும், அவர் தெரிவித்த கருத்தும், அ.தி.மு.க.,வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அவர்களை திருப்பி அனுப்பிய செங்கோட்டையன், 'என் மனதில் பட்ட கருத்தை தெரிவித்தேன். கட்சிக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டேன். அன்று பேசியது, அப்போதே முடிந்து விட்டது' என்றார்.இதற்கிடையில், பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதால், அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டோர்; ஒதுங்கி இருப்போரின் ஆதரவாளர்கள் சிலர் செங்கோட்டையனிடம் பேசி, பழனிசாமிக்கு எதிராக கொம்பு சீவி உள்ளனர். ஆனால், அவை எதற்கும் பிடிகொடுக்காத செங்கோட்டையன், 'கட்சியில் முக்கிய தலைவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் காணப்பட்டது; முக்கிய தலைவர்களுக்கு எதிராக லோக்கலிலேயே எதிர்ப்பு அணியை உருவாக்க முயற்சிக்கின்றனர்.அதுதான் எனக்கான முக்கிய பிரச்னை. அதை வெளிப்படையாக சொல்லி உள்ளேன்; கட்சித் தலைமை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி, எனக்கு வேறெந்த எண்ணமும் இல்லை' என தெளிவாக சொல்லி விட்டார். இதனால், செங்கோட்டையன் விவகாரத்தில் இருந்து அவர்கள் விலகி விட்டனர்.அதன்பிறகு, ஈரோடு மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டங்களில் செங்கோட்டையன் பங்கேற்று பேசினார். ஆனால், தன் மேடைப்பேச்சில் மறந்தும் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை; திட்டமிட்டே தவிர்த்து வருகிறார். செங்கோட்டையன் அமைதியான பின்பாவது, பழனிசாமி அவரிடம் தொலைபேசியில் பேசி சமாதானப்படுத்தி இருந்தால், இந்தப் பிரச்னை தொடராது. ஆனால், பழனிசாமி அதை செய்ய வில்லை; அதனால், செங்கோட்டையனின் வருத்தம் தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சீர்குலைந்து விடும்

இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியில் பழனிசாமியை விடவும் சீனியர் செங்கோட்டையன். எனினும், அவரது தலைமையை ஏற்று பயணித்து வருகிறார். மற்றவர்கள் போலவே தானும் நடத்தப்படுவது, அவருக்கு வருத்தத்தை தந்துள்ளது. ஆனால், செங்கோட்டையனை சந்தித்தோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பழனிசாமி சமாதானப்படுத்தினால், பலரும் இப்படி அதிருப்தியை வெளிப்படையாக தெரிவிக்கத் துவங்குவர். பின், சமாதானப்படுத்துவதே வேலையாகி, கட்சி கட்டுப்பாடு சீர்குலைந்து விடும். அதனால், செங்கோட்டையன் விஷயத்திலும் பழனிசாமி இறங்கி வர மறுக்கிறார். அதனால், பிப்., 9க்கு பின், பழனிசாமி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.நடப்பது கட்சிக்கு நல்லதல்ல என்பதே சீனியர்கள் பலரின் வருத்தம். இருந்தாலும், அதையும் கூட பழனிசாமியிடம் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
பிப் 25, 2025 21:11

அதிமுக பிழைக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. எடப்பாடியை பதவியை விட்டு தூக்கி எறிய வேண்டும் மற்ற தலைவர்கள் ஓன்று கூடி இதை செய்யா விட்டால் அதிமுக பிழைக்காது.


m.arunachalam
பிப் 25, 2025 20:35

தன்னிலை உணராத ,முறையற்ற பிடிவாதம் மற்றும் அறியாமை .


RAJA
பிப் 25, 2025 16:20

ஸ்டாலினுக்கும் எடப்பாடி ஐயாவுக்கும் புரிதல் உள்ளது எந்த காலத்திலும் அண்ணா திமுக ஒன்றாக சேர்ந்து விடக்கூடாது எப்பவும் திமுக தான் ஜெயிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்டுள்ளனர்.


K.P SARATHI
பிப் 25, 2025 15:55

ஸ்டாலின் எதிராக எடப்பாடி பயப்படுகிறார் ஒன்று கூடி முதல்வர் பதவி பெறுவதை விட எதேச்சி அதிகாரத்துடன் கட்சி தலைவராக இருப்பது விரும்புகிறார்


amicos
பிப் 25, 2025 14:53

சசிகலாவை தவிர்த்து மற்ற அனைவரையும் ஒன்றிணைக்கவிட்டால் கட்ஷி அவ்வளவுதான்,ஆனால் பழனிச்சாமி கட்ஷி என்ன ஆனாலும் சரி கட்ஷி தன் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்.ஜே ஜே இருந்த போது அவர் கவ்ரவம் பார்க்காமல் ஒரு முறை docter ராமதாஸ் மற்றும் வை கோ இருப்பிடத்துக்கே சென்று கூட்டணி பேசி தேர்தலிலும் வென்று காட்டினார்.


பேசும் தமிழன்
பிப் 25, 2025 07:57

எந்த பொதுக்குழு மூலம் பதவிக்கு வந்தாரோ.... அதே பொதுக்குழு மூலம் பத்து தோல்வி பழனிசாமி அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.... கட்சி ஒன்றுபடுவது திமுக கட்சிக்கு நல்லதல்ல.... அதனால் பங்காளி கட்சி ஆட்களிடம் பேசி.... கட்சி ஒன்றுபடாமல் பார்த்து கொள்கிறார்கள்.... அதற்க்கு பழனிச்சாமி சப்போர்ட்..... அந்தளவுக்கு திமுக வெற்றி பெற வேலை செய்து வருகிறார்.


மால
பிப் 25, 2025 05:55

சீக்கிரம் நீ பிச்சக்குவ அத செய் கட்சியால தான் நீ உன்னால் கட்சி அல்ல


ram
பிப் 25, 2025 14:01

இப்படியே சொல்லி சொல்லி கடைசியில் EDAPADDI கட்சியை திருட்டு திமுகவுடன் இணைத்து விட போகிறார். EDAPADDI இருக்கும் வரை தேர்தலில் AIADMK கண்டிப்பாக ஜெயிக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை