உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மகளிர் உரிமைத்தொகையில் வேகம்; முதியோர் உதவித்தொகை மந்தம்

மகளிர் உரிமைத்தொகையில் வேகம்; முதியோர் உதவித்தொகை மந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பயனாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில் முதியவர்களின் துயரத்தை போக்கும் வகையில், 1962 முதல் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது மாதம் 20 ரூபாய் வழங்கப்பட்டது. 60 ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது, 1,200 ரூபாயாக வழங்கப்படுகிறது. வங்கி கணக்கு வாயிலாக பயனாளிகளுக்கு வரவு வைக்கப்படுகிறது.தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தும் முன் வரை, மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியவர்களுக்கு உதவித்தொகை வரவானது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலான பின், அதற்கு பணம் வழங்கிய பின்னரே முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்திற்கு பின், மாதக் கடைசி நாட்கள் வரை பயனாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. வங்கி சேவை மையங்களுக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியுள்ளது.எனவே, மாதந்தோறும் 10ம் தேதிக்குள் வழங்க, முதியோர் உதவித்தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர் -- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
மார் 06, 2025 22:00

எதுக்கு ஓட்டு கிடைக்கும், எதுக்கு ஓட்டு கிடைக்காது என்று திராவிஷ களவாணி களுக்கு நன்கு தெரியும். தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு இன்னும் பல தகிடுதத்தம் செய்வார்கள். கூட்டணிகள் அமைவதை பொறுத்து பற்பல டூபாகூர் அறிவிப்புகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி விடுவார். கடைசியில் ஓட்டுக்கு ரொக்க பணம், சரக்கு பிரியாணி சப்ளை செய்து ஓட்டு வாங்க முயற்சி செய்வார்கள். மக்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 06, 2025 11:28

வயசானவங்களாலே என்ன பிரையோசனம் ஓட்டு போட வர மாட்டார்கள் கட்சி கூட்டத்திற்கு ஆள் சேர்த்தா அதுக்கும் வர மாட்டார்கள் அப்படியே வந்தாலும் ஏதாவது ஏடா கூடமாக நடந்தால் அதுக்கு வேற பத்திரிகை காரர்களுக்கு பதில் சொல்லனும். ஆக தற்போதைய இளைஞர்கள் தான் வயதானவர்களால் பிரயோசனம் இல்லைன்னு ஒதுக்குனா அரசுக்கு கூட இந்த வயசானவங்க வேண்டாதவங்க ஆயிட்டாங்க


அப்பாவி
மார் 06, 2025 06:18

கள்ள சாராயம் குடிச்சு செத்தால் பத்து லட்சம் உடனே வரவு வெய்க்கப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை