உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை; சி.பி.ஐ., வழக்கில் கோர்ட் தீர்ப்பு

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை; சி.பி.ஐ., வழக்கில் கோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்கால்: நில விற்பனை அனுமதி சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகர அமைப்பு குழு அதிகாரி உள்ளிட்ட இருவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் சி.பி.ஐ., நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.காரைக்கால், நல்லம்பல் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ஞானராஜ். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு விற்பனை அனுமதி சான்று பெற, கடந்த 2017ம் ஆண்டு காரைக்கால் நகர அமைப்பு குழுவில் விண்ணப்பித்தார். அப்போது பணியிலிருந்த நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், உதவியாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இதுகுறித்து ஜேக்கப் ஞானராஜ், சி.பி.ஐ.,யில் புகார் செய்தார்.அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ., அறிவுரையின்படி, 22.6.2017ல், ஜேக்கப் ஞானராஜ் நகர அமைப்பு குழு அலுவலகத்திற்கு சென்று ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதனை வாங்கிய ராஜேந்திரன், சிவராமகிருஷ்ணன் இருவரையும் கையும் களவுமாக சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். இருவர் வீடுகளில் சோதனையிட்டு பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும், காரைக்கால் சி.பி.ஐ., கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு நீதிபதி மோகன் முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில், ராஜேந்திரன்,59; சிவராமகிருஷ்ணன், 67; இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானதை தொடர்ந்து, இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 09, 2025 20:54

மாதம் 30000 கோடி திருடும் குடும்பத்தை பிடித்து போட அருகதையில்லை


sekar ng
ஜூலை 09, 2025 18:53

10 ஆயிரத்துக்கு 5 வருட தண்டனை, ஆனால் 1000 கோடி டாஸ்மாக் ஊழலுக்கு அமச்சர் பதவி பரிசு


என்றும் இந்தியன்
ஜூலை 09, 2025 16:26

அப்போ ரூ 5 லட்சம் கோடி ஊழல் பணம் இருக்கும் அரிசி யல் முதல்வருக்கு எவ்வளவு வருடம் தண்டனை???? அவர்களுக்கு தண்டனை இல்லை எங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்து விட்டதால் அப்படித்தானே நீதிமன்றமே


சிந்தனை
ஜூலை 09, 2025 15:13

ஐந்து ஆண்டுக்கு அவர் காகம் பராமரிப்பு செலவுகளை நீதி நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து கொடுத்தால் பரவாயில்லை திருடர்களுக்கு பொதுமக்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்பதை தெரிவித்தால் பரவாயில்லை அரசு ஊழியர்கள் கொள்ளை அடித்தால் தூக்கு தண்டனை தான் சிறந்ததாக இருக்கும் நீதிபதிகள் உட்பட


Raghavan
ஜூலை 09, 2025 17:05

சட்டங்கள் கடுமையானால் எவரும் லஞ்சம் லாவண்யத்தில் ஈடுபடமாட்டார்கள். பின்பு நீதிமன்றங்களுக்கு வேலையே இருக்காது. அதனால்தான் அரசாங்கமே சட்டங்களை கடுமையாக்கவில்லை. சட்டங்களில் அங்கெங்கெ ஓட்டைகளையும் வைத்துள்ளார்கள். கபில் சிபல், சிங்க்வி போன்றவர்கள் அந்த ஓட்டையில் புகுந்து தேடி பலே குற்றவாளிகளை விடுவித்துவிடுகிறார்கள். சாதாரண குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.


Ramalingam Shanmugam
ஜூலை 09, 2025 13:03

லஞ்சம் வாங்கி சம்பாதித்த சொத்துக்கள் சட்ட பூர்வமாகிவிட்டது நல்ல சட்டம் இந்தியாவில்


Roy
ஜூலை 09, 2025 12:44

Delhi high court Judge case, what is the position


SANKAR
ஜூலை 09, 2025 13:30

VP himself stated nothing could be done couple of days ago and impeachment in Parliament is necessary


SJRR
ஜூலை 09, 2025 12:17

கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் மற்றும் வாங்கிய லஞ்சப்பணத்தில் பங்குபோடும் மேல்தட்டு முதலாளிகள் எல்லோரும் வெளியே உள்ளார்கள். அவர்கள் மீது எப்பொழுது நடவடிக்கை?


sugumar s
ஜூலை 09, 2025 12:04

court wasting time. instead of this case, take bigger corruption case and conduct that.


Padmasridharan
ஜூலை 09, 2025 11:34

புகாரளித்தவரின் தைர்யத்திற்கு வாழ்த்துகள்.. மாட்டினவங்க சில பேர் மாட்டாதவங்க பலர். . கிராமத்திலுள்ளவர்களுக்கு அநியாயத்தை எதிர்த்து புகாரளிக்கும் தைரியம் நகரத்திலுக்குள்ளவர்களுக்கு இல்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை