சிறைத்துறையில் 2 ஆண்டுகளில் 60 பேர் சஸ்பெண்ட்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: தமிழக சிறைத்துறை யில், டி.ஜி.பி.,யாக மகேஷ் வர் தயாள் பொறுப்பேற்ற பின், 2 ஆண்டுகளில் காவலர்கள் உட்பட, 60 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட காவலர் பிரபு என்பவர், செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதாக கூறி விரக்தி அடைந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, சக காவலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.தமிழகத்தில் ஒன் பது மத்திய சிறைகள், மாவட்ட, கிளை சிறைகள் என, நுாற்றுக்கும் மேற் பட்ட சிறைகள் உள்ளன. இத்துறை டி.ஜி.பி.யாக மத்திய அரசு பணியில் இருந்த மகேஷ்வர்தயாள், 2023 டிசம்பரில் பொறுப்பேற்றார். மத்திய அரசு பணியின் போது துணை ராணுவ படைகள் சார்ந்த பணிகளையே இவர் கவனித்தார். இதனால், அங்கிருப்பது போல, தமிழக சிறை காவலர்களும் கடும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று கருதி, டிஸ்மிஸ், சஸ்பெண்ட் என, கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சிறை காவலர்கள் புலம்புகின்றனர்.இடமாற்றம்
அவர்கள் கூறியதாவது: பணியில் கவனக்குறைவாக, ஒழுங்கீனமாக இருந்தால், மெமோ கொடுக்கப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது வழக்கம். ஆனால், மகேஷ்வர் தயாள் பொறுப்பேற்ற பின், 'டிஸ்மிஸ்' செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. காவலர்களின் குடும்ப விஷயமாக புகார் சென்றாலும், 'டிஸ்மிஸ்' தான். கடலுார், கிருஷ்ணகிரி, வேலுார் சிறை காவலர்கள் சிலர், இத்தகைய நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை, 60 பேர் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே நிர்வாக சீர்த்திருத்தம் எனக்கூறி 200 கி.மீ.,க்கு அப்பால் உள்ள சிறைகளுக்கு உதவி ஜெயிலர்கள், காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். மருத்துவம், பிள்ளைகளின் கல்வி என உண்மையான காரணங்களை கூறினாலும், னாலும், டி.ஜி.பி., மனம் இரங்கவில்லை. இவரை போல் காவலர்கள் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். நடவடிக்கையை ரத்து செய்யுமாறு அதிகாரிகளிடம் மனு அளித்தால், அதை கிடப்பில் போடுகின்றனர்எடுத்தவுடனே 'டிஸ்மிஸ்'
தஞ்சாவூர் ஒரத்த நாட்டை சேர்ந்தவர் காவலர் பிரபு: மன்னார்குடியில் இருந்து புழல் சிறை 2க்கு மாற்றப்பட்டார். இது, அவருக்கு மனஅழுத்தத்தை தந்தது. சில நாட்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு சென்றவர், மீண்டும் சென்னை திரும்பும் போது, மது அருந்தியுள்ளார். தன் அறையில் ஒய்வெடுத்து விட்டு, மறுநாள் பணிக்கு சென்ற போது, முதல்நாள் மது அருந்திய வாசனை இருந்துள்ளது. மது அருந்தி விட்டு பணிக்கு வந்ததாக கூறி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் பரிசோதித்தனர்.முதல் நாள் அருந்திய மது, அவரின் ரத்தத்தில் கலந்திருந்ததால், பணிக்கு மது அருந்தி வந்ததாக கூறி டி.ஜி.பி., உத்தரவுபடி, 'டிஸ்மிஸ்' செய்தனர். இதுபோன்ற நிகழ்வுகளில் 'சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கு பின், பணியில் சேர்ப்பது வழக்கம். பிரபு விஷயத்தில் எடுத்தவுடனே, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டதால் மனமுடைந்து ஊர் திரும்பியவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், சந்தித்தும் பலனில்லாததால், விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை போல் காவலர்கள் பலர் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். நடவடிக்கையை ரத்து செய்யுமாறு அதிகாரிகளிடம் மனு அளித்தால், அதை கிடப்பில் போடுகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் விசாரணையின் போது, 'பரிசீலனையில் உள்ளது' எனக்கூறி நீதிமன்றத்தை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு இவ்விஷயத்தில் கண்டும், காணாமல் உள்ளது. இதனால், பாதிக்கப்படுவது நாங்களும், எங்கள் குடும்பமும் தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.