உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தினமும் ரூ.7 கோடி; மதுவால் காலி

தினமும் ரூ.7 கோடி; மதுவால் காலி

திருப்பூர் மாவட்டத்தில் தினமும் டாஸ்மாக் கடைகள் மூலம் 7 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை, தற்போது, 224 ஆக உள்ளது. திருப்பூர் நகரப் பகுதியில் 110 கடைகளும், புற நகர் மாவட்டத்தில் மீதமுள்ள கடைகளும் உள்ளன. இவற்றில் 186 கடைகளில் மட்டும் உரிய அரசு அனுமதி பெற்ற பார்கள் உள்ளன. பல்வேறு கடைகளில், பார் அமைக்க வசதியில்லாதது, பார் உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் மூடப்பட்டது போன்ற காரணங்களால் பார்கள் இல்லை.டாஸ்மாக் நிறுவனத்தைப் பொறுத்தவரை பகல் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே கடைகள் மற்றும் பார்கள் திறந்து செயல்பட வேண்டும். இதில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் பார்கள் 24 மணி நேரமும், 'குடி'மகன்களுக்கு சரக்கு சப்ளை செய்து 'சேவை'யாற்றி வந்தன.இதைக் கண்காணிக்க வேண்டிய டாஸ்மாக், மது விலக்கு அமலாக்கத் துறை, கலால் துறை அலுவலர்கள் பல்வேறு காரணங்களால் கண்டும் காணாமலும் போகும் நிலை உள்ளது. பலமாக 'கவனிக்க'ப்படும் அதிகாரிகள், போலீசார், உண்மையாக பணியாற்றினால் கூட கறை படிந்த அதிகாரிகளால், அரசியல் கட்சியினர், லோக்கல் ரவுடிகளால் மிரட்டல் 'கவனிப்பு' என இவர்கள் கைகள் பல நேரங்களில் கட்டப்படுகிறது.இது தவிர பத்திரிகையாளர் என்ற பெயரில் சில 'டுபாக்கூர்' ஆசாமிகள், போலி அடையாள அட்டைகளுடன் மதுக்கடை பார்களில் சிலர் வசூல் வேட்டை நடத்துகின்றனர். சிலர் நேரடியாகச் சென்று படம், வீடியோ என எடுத்து பணம் பறிப்பது சகஜமாக உள்ளது.இது தவிர லோக்கல் ரவுடிகள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் கட்சிகளின் பெயர்களில் மாதம் தோறும் வசூல் செய்கின்றனர். இதில் கடைகளைப் பொறுத்து 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கூட மாமூல் செலுத்தப்படுகிறது.

போலீஸ் கமிஷனர் அதிரடி

போலீஸ் கமிஷனர் லட்சுமி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் திருப்பூரில் தற்போது, பார்களில் மது விற்பனை பெரும்பாலும் நிறுத்தப்பட்டு விட்டது. அதே சமயம், அருகேயுள்ள மறைவான இடங்களில், ரகசியமாக மது பாட்டில் விற்பனை நடக்கிறது.இது வரை ஸ்டேஷன் மாமூல் என்ற அளவில் நேரடியாக வழங்கிய தொகை மட்டுப்பட்டு விட்டது. ஆனால் ஸ்டேஷனுக்கு ஏதாவது காரியம் என்றால் அதை செய்து தர சில இடங்களில் பார் உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக மறைவான இடங்களில் நடக்கும் 'சரக்கு' விற்பனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

ஆண்டுக்கு ரூ.2520 கோடி

'வேண்டாம் போதை; தடம் மாறும் பாதை' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும்கூட, மது விற்பனை தொடர்ந்து சக்கைப்போடு போடுகிறது. ஆம். திருப்பூர் மாவட்டத்தில் 224 டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம், தினமும் 7 கோடி ரூபாய் அளவுக்கு மது வகைகள் விற்பனையாகிறது.அதாவது மாதத்துக்கு 210 கோடி; ஆண்டுக்கு 2,520 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 01, 2024 13:01

அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் சாராயம் இதுவே தமிழக அரசின் கொள்கை. மதுப் பிரியர்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆளமுடியாது. மது குடிப்பது மது விற்பனை இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே முன்னனி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே இலக்கு. அதற்காக எத்துணை செந்தில் பாலாஜிகளையும் துணை முதல்வர் களையும் களமிறக்கவும் தாயாராக உள்ளன திராவிட கட்சிகள். பஞ்சாப் முதல்வரை பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் கூட களமிறக்க தயாராக இருப்பார்கள்.


N Sasikumar Yadhav
செப் 30, 2024 12:28

தமிழகம் என்கிற பெயரை திருட்டு திராவிட குடிப்பகம் என மாற்றிவிடலாம் அந்தளவுக்கு திருட்டு திராவிட களவானிங்க சாராயத்தை பெருங்கடலாக உற்பத்தி செய்கிறானுங்க


சமீபத்திய செய்தி