உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்

புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகில் வாழும் முக்கிய 3 மதங்களை இணைத்து ஒரே மதமாக உருவாக்கும் பெரும் முயற்சி நடந்து வருவதாக அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகம்மது இலியாஸி கூறியுள்ளார். இமாம் மேலும் கூறியதாவது: உலகில் வாழும் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை கொண்ட ஒரு புதிய மதம் உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. 3 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம் தான். இறைவன் ஒருவனே ! என்பதும் முக்கிய கொள்கை. இந்த 3 மதத்தினரையும் இணைத்தால் மோதல்கள் குறையும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=09wgggvt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் தங்களுக்குள் சண்டை போடுகிறார்கள், அவர்கள் உறவினர்கள், சகோதரர்கள் என்றாலும், அவர்களை ஒன்றிணைக்க ஒரே வழி ஒரே மதம் தான் . வரவிருக்கும் ஆபிரகாமிய நம்பிக்கையின் மதம் உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் . 3 மதங்களையும் இணைக்கும் குரல் ஒலிக்க துவங்கி விட்டது. இந்த புதிய மதத்திற்கு நம்பிக்கை என்ற பெயர் வைக்கப்படும். இதற்கென ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலும் ஒரு ஆபிரகாம் நம்பிக்கை மையம் கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டு முறைகள் நிச்சயமாக வேறுபட்டவை; ஆனால் அனைத்தும் ஒன்றுதான். உலகமெங்கும் மூன்று மதங்களையும் இணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அது கண்டிப்பாக வரும், ஆனால் எப்போது வரும் என்று தெரியவில்லை. இவ்வாறு இமாம் இலியாஸி கூறினார்.

அயோத்தியில் பங்கேற்றவர்

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றவர் இந்த இமாம். இந்த விழா நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் விதமாக அமையும் என கூறியிருந்தார். இதனால் இவர் மீது பலர் விமர்சனங்களை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

SakthiBahrain
ஏப் 07, 2025 13:35

அது உண்மையா இருந்தா, நான்தான் முதல் ஆளாக சேருவேன்.


Ramesh Sargam
ஏப் 05, 2025 20:30

உலகில் வாழும் அனைத்து மக்களையும் இணைத்து ஒரு புது மனித இனம் உருவானால் மகிழ்ச்சி. அதைவிட்டு புதிய மதம் வரப்போகுதாம். ம த வெ றி பிடித்த மனிதர்கள்...


Rasheel
ஏப் 05, 2025 16:28

மதம் என்ற போர்வையில் அடுத்தவனை ஏமர்றாதீர்கள். பாவமன்னிப்பு என்ற போர்வையில், என் கடவுள் தான் உண்மை என்றும் அதனாலேயே அடுத்த மதத்து காரனை கொல்வேன் என்று சொல்லும் அப்ரஹாமியம் எப்படி அமைதியை தேடும். உலக அழிவுக்கே வழி வகுக்கும்.


Pulikesi
ஏப் 05, 2025 13:53

மூன்றும் மூன்று விதமான விதங்களில் பயணிப்பவை எவ்வாறு ஒன்றாக மாறும் பல அரசியல் கணக்குகள் பல விஷயங்கள் உள்ளது வாய்ப்பே கிடையாது


அப்பாவி
ஏப் 04, 2025 22:36

அப்போ லா இலா ஹில் அல்லல்லா என்ற முதல் வாக்கியமே தப்பாயிருமே...


RK
ஏப் 04, 2025 22:12

இஸ்ரேல் கொடுக்கும் அடியால் இமாம் இப்படி உளற ஆரம்பிச்சுட்டான் !!!


பெரிய குத்தூசி
ஏப் 04, 2025 20:45

பாய் நல்ல கனவு கண்டு உளறுகிறார். புதிய மதம் உருவாகிறது என்றால் அது பண பலனுக்கு உண்டான பணத்தை அடிப்படையாக கொண்ட மாதமாக தான் இருக்கும்.


MUTHU
ஏப் 04, 2025 19:24

இந்த மதங்கள் தங்களின் இருப்பினை நிலைநிறுத்த கோடிக்கணக்கானவர்களை கொன்று குவித்துள்ளன. தங்களின் ஆதிக்க வெறியின் வெளிப்பாடுகளே இந்த மதங்கள்


Mediagoons
ஏப் 04, 2025 19:16

பா.ஜ.,வால் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் நாடகம்


பேசும் தமிழன்
ஏப் 04, 2025 23:16

கதை சொன்ன.... பாயை குறை சொல்ல முடியவில்லை.... நேரா பிஜெபி பக்கம் போய் விட்டார்.


Mahalingam Laxman
ஏப் 04, 2025 18:50

when started it is said they want to unite three bis religion in the world. So, they do not consider the Hinduism is one of the big religions in the world. If anyone see the groups, it looks like it is anti-Hinduism union. Let Muslims settle differences among themselves and unite. laxman.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை