உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்து விட்டது: ஸ்டாலின்

அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்து விட்டது: ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்துார்: ''தமிழக மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த, பா.ஜ., தொடர்ந்து முயற்சித்து வருகிறது,'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.திருப்பத்துார் அடுத்த மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 273.83 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, ஒரு லட்சத்து 168 பயனாளிகளுக்கு வழங்கியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழக மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த, பா.ஜ., தொடர்ந்து முயற்சித்து வருகிறது.பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் மக்களை பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகின்றனர். இது தான் அவர்களுடைய அரசியல். 'மிஸ்டு கால்' கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை, 'மிஸ் யூஸ்' செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை, இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்.தமிழகம், ஈ.வெ.ரா உருவாக்கிய மண், அண்ணாதுரை வளர்த்த மண், கருணாநிதி மீட்ட மண். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும், தங்கள் உரிமையோடும், பிற மதத்தினரோடும், நல்லிணக்கத்தோடும் வாழும் மண். கடந்த நான்கு ஆண்டில் தமிழகத்தில் 3,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்ச், மசூதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் நம் தி.மு.க., அரசு.இதை எல்லாம் பார்த்து தான், மதவாத அரசியல் செய்கிறவர்களுக்கு பற்றி எரிகிறது. அவர்களால் தமிழகத்திற்கு செய்த வளர்ச்சியை பற்றி பேச முடியவில்லை; மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. செய்திருந்தால் தானே சொல்ல முடியும்.தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், ஈ.வெ.ரா., அண்ணாதுரையால் மேன்மை படுத்தப்பட்ட மண், கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண். இப்படிபட்ட தலைவர்களை, நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள், அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணாதுரை பெயரில் கட்சி நடத்தும் கூட்டம். அண்ணாதுரை பெயரையே, அவர்கள் அடமானம் வைத்து விட்டனர். இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு தமிழகத்தை அடமானம் வைக்க அனுமதிக்கக்கூடாது. தன்மானமுள்ள தமிழக மக்கள், இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும், எதிரிகளுக்கும், துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும்'

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருப்பதால், அந்த கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க., அமைதியாக இருக்கிறது; பா.ஜ., சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அ.தி.மு.க.,வை விழுங்குவது தான் பா.ஜ.,வின் திட்டம்.முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு உள்ளனர். இப்படிபட்டவர்களுடன் அ.தி.மு.க., எப்படி பயணிக்க முடியும்? எனவே, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., பயணிப்பது தற்கொலைக்கு சமமானது.நடிகர் கமல் தி.மு.க.,வுடன் வந்து விட்டார். அவரின் துவக்க அரசியல் பேச்சுக்கும், இப்போது பேசுவதற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன.மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ வெளியானது குறித்து, நடிகர் விஜய் எதிர்த்து கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ஈ.வெ.ரா.,வை விமர்சித்த பின்னும் அமைதி காக்கும் விஜய், உண்மையிலேயே அவரை உள்வாங்கிக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

R.MURALIKRISHNAN
ஜூன் 28, 2025 02:14

ஸ்டாலினுக்கு உதறல் எடுத்ததால் உளர ஆரம்பிச்சுட்டார்


Raj S
ஜூன் 28, 2025 01:16

திருட்டு திராவிடர்களின் புலம்பல் பாக்க பாக்க ஆனந்தமா இருக்கு...


vijai hindu
ஜூன் 27, 2025 23:16

இங்க மக்கள் விவசாயிகள் சரியான விலை இல்லை என்று கஷ்டப்படுகிறார்கள் ஆனால் திமுக தலைவர் அண்ணா பெயரை அடமானம் வைத்து விட்டார்கள் என்று அவர் பேர அடமானம் வைத்து என்ன ஆயிரம் கோடி வாங்கிட்டாங்க அரசியல் செய்ய வேறு வழியே இல்லையா உங்களுக்கு


Ramesh Sargam
ஜூன் 27, 2025 22:15

அப்படியா, அப்படி என்றால், ஆட்சியில் உள்ள நீங்கள் மீட்டெடுக்கலாமே ....


R.MURALIKRISHNAN
ஜூன் 28, 2025 02:11

இவருக்குத்தான் ஆள தெரியலியே


Rajasekar Jayaraman
ஜூன் 27, 2025 22:12

மக்களுக்கு 1008 பிரச்சனைகள் இருக்கு மாம்பழம் விவசாயிகள் மாம்பழத்தை கீழே கொட்டி அழிக்கிறார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எவன் பேரை அடமானம் வைத்தால் மக்களுக்கு என்ன! மக்கள் பிரச்சனை பார்க்க தான் அரசாங்கம் அதை விடுத்து தேவையில்லாத பொறம்போக்கு வேலையை தான் நடக்கிறது.


S Balakrishnan
ஜூன் 27, 2025 22:02

பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கும் கோயபல்ஸ் வாரிசு இப்போது பித்தலாட்டத்தை திரும்ப திரும்ப செய். அது எதார்தமாகி விடும் என்று ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கிறார். ஆனால் தமிழக மக்களை முருகன் விழிப்படைய வைத்து வெகு நாட்களாகி விட்டது. ஓங்கோல் மாதிரி ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடி அங்கு உங்கள் திராவிட மாடலை குழி தோண்டி புதைக்கலாம்.


theruvasagan
ஜூன் 27, 2025 21:56

அதிமுக பாஜக கூட்டணி முடிவானதிலிருந்து இவரும் திருமாவும் ரொம்பவே ஆடிப் போயிட்டாங்க. முழிக்சுகிட்டு.இருக்கறப்பவும் தூங்கறப்பவும் இதைப் பத்திதான் ஒரே புலம்பல். அதோட நாளுக்குநாள் முத்திகிட்டே போகுது.


c.mohanraj raj
ஜூன் 27, 2025 21:26

உங்கள் அப்பன் கச்சத்தீவு அடமானம் வைத்தால் காவிரியை அடமானம் வைத்தார் 25,000 சர்க்கரை மூட்டையை அடமானம் வைத்தார் இன்னும் என்ன இருக்கு அடமானம் வைக்க


Venkatesh
ஜூன் 27, 2025 21:13

அண்ணாதுரை இன்று இருந்திருந்தால் இன்று இந்த மானங்கெட்ட மாடல் குடும்பத்தை ஏற்றுக் கொண்டு இருப்பாரா?


Venkatesh
ஜூன் 27, 2025 21:11

அவர் என்ன உங்கொப்பன் வீட்டு சொத்தா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை