உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாதுரை விமர்சன வீடியோவால் குஸ்தி!

அண்ணாதுரை விமர்சன வீடியோவால் குஸ்தி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்றோரை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட அ.தி.மு.க., தலைவர்கள் அதை எதிர்க்கவில்லை என, தி.மு.க.,வின் விமர்சனம் கடுமையாக இருக்க, அ.தி.மு.க., தரப்பில் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:

மதுரையில் நேற்று முன்தினம் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. அதை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லுார் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு ஆகியோர் பார்த்துள்ளனர். அண்ணாதுரையை கேவலப்படுத்துவதை, அவரது பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தமா; பா.ஜ., பாசமா?அண்ணாதுரையின் பெயரைக் காப்பாற்றுவதை விட, தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்து விட்டனர். இன்றைக்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அ.தி.மு.க.,வில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாதுரைக்கும், ஈ.வெ.ராமசாமிக்கு இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கின்றனர். அ.தி.மு.க., கொடி நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா; அந்த அண்ணாதுரையை மாற்றிவிட்டு, அங்கே அமித் ஷாவை வைத்து விட்டீர்களா?மதுரையில் முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றால், கோவையில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். அடுத்து நாக்பூரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தஞ்சம் அடைவாரா? கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ்., பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த தளவாய் சுந்தரத்தை, கட்சிப் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். அடுத்த மாதமே, அவரை சேர்த்துக் கொண்டார். அப்படியான நாடகம் கூட ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற வேலுமணிக்கு நடக்கவில்லை.முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, 'சூரனை வதம் செய்த முருகா, திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா' என்றும், 'திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தரே' என்றும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டுக்கு, 'திராவிட' என்ற பெயர் தாங்கிய கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தால் அமைச்சரானவர்களும் பங்கேற்கின்றனர்.திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்திருக்கிறது.பா.ஜ.,வின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் துரோகத்துக்கு, வரும் 2026ம் ஆண்டு தேர்தலோடு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

முருகன்
ஜூன் 24, 2025 21:43

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக நலன்களை அடகு வைப்பர்


S Srinivasan
ஜூன் 24, 2025 19:08

DMK totally frightened and accused everything in bad language, they should be rooted out


Kulandai kannan
ஜூன் 24, 2025 16:26

2026ல் அதிமுக தனியே ஆட்சி அமைத்தால், 2031ல் அவர்கள் அதை தங்கத் தாம்பாளத்தில் வைத்து திமுக விடம் கொடுப்பார்கள். கொள்கையே இல்லாமல் லஞ்சம், ஊழல் மட்டுமே அவர்கள் DNA


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 12:31

நெற்றியில் குங்குமம் இட்டு வந்த எம்எல்ஏவைப் பார்த்து நெற்றியில் என்ன ரத்தமா, இந்து என்றால் திருடன் என்றெல்லாம் இழிவாகப் பேசினார் கருணாநிதி. சிதம்பரம் ஸ்ரீரங்கம் ஆலயத்தை பீரங்கி வைத்து தாக்கும் நாள் எப்போ என்றார் அவரது குருநாதர். இப்போ பல திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் நிரந்தரமாக நெற்றியில் விபூதியுடன் வலம் வருகிறார்கள். எந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும் திமுக எம்எல்ஏ இல்லாமல் நடப்பதில்லை.ஆனால் இவர்களது கடந்த காலத்தை சுட்டிக்காட்டினா ஆத்திரம் வருகிறது. மாற்றத்துக்கு ஹிந்துத்துவ பேரெழுச்சிதானே காரணம்?.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 10:31

வரும் தேர்தலில் திமுக ஈவேராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கூறி வாக்குக் கேட்கட்டும். வீரமணியை பிரச்சாரத் துக்கு அழைக்கட்டும் பார்ப்போம். அட 7 ஆண்டுகளாக திமுக பானர்களில் அண்ணாதுரை படத்தையே இருட்டடிப்பு செல்கிறார்கள். இவர்கள் பிஜெபி யின் வீடியோவை எதிர்ப்பது காமெடி.


venugopal s
ஜூன் 24, 2025 10:20

திடீரென நிமிர்ந்து நிற்கச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!


புரொடஸ்டர்
ஜூன் 24, 2025 08:43

டுபாக்கூர் கும்பல்.


Venukopal, S
ஜூன் 24, 2025 08:22

ஒண்ணும் தெரியவில்லை என்றால் வீட்டில் யாராவது பெருசு கிட்ட போய் கேளு


S. Balakrishnan
ஜூன் 24, 2025 06:49

ஆர். எஸ். பாரதி வழக்கமான சாக்கடை அரசியலை பேசுகிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி அரசியல் செய்த அண்ணாதுரையை தான் எம் ஜி ஆர் கொடியில் பறக்க விட்டார். மக்களை ஏமாற்றி ஊழல் செய்து சொத்து சேர்க்கும் கருணாநிதியின் கபட திராவிட மாடல் ஆட்சியை அழிக்கவே வேல் எடுத்து வர முருகனுக்கு வேண்டுதல். அறிவாலயத்தில் தவமிருக்கும் ஆர் எஸ் பாரதிக்கு இது தெரிய வேண்டும்.


சமீபத்திய செய்தி