உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அயோத்தி நன்கொடை முறைகேடு விவகாரம்: கோபத்தில் மோடி!

அயோத்தி நன்கொடை முறைகேடு விவகாரம்: கோபத்தில் மோடி!

- நமது சிறப்பு நிருபர் -பா .ஜ., வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, அயோத்தி ராமர் கோவில் விவகாரம். ஆனால் தற்போது, அதே கோவிலின் நன்கொடை முறைகேடு விவகாரம், அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5poryd4t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம், பிரதமர் மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரோ என, எந் த பெரிய தலைகள் இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எ ன, அவர் உத்தரவிட்டுள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர். இதை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளார், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.இதில், எட்டு பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் சமீபத்தில் கைது செய்தனர். ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தார்மிக அடிப்படையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.கைதான எட்டு பேரில் முக்கியமானவர், ராமசங்கர் என்கிற டின்னு யாதவ். இவர், அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராயின் டிரைவர். இவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தார் சம்பத் ராய். நன்கொடை பணம் இருந்த அனைத்து பெட்டிகளின் சாவிகளும் ராமசங்கரிடம் இருந்துள்ளன.கோவிலுக்கு ஆட்களை வேலைக்கு எடுப்பதிலும், பணம் எண்ணும் பணியை ஒதுக்கீடு செய்வதிலும் ராமசங்கரே முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும், இவருக்கு அயோத்தி மற்றும் லக்னோவில், 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும், ஆடம்பர குடியிருப்பு மற்றும் பல விலையுயர்ந்த கார்களும் உள்ளன.முதல் தகவலறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள மனிஷ் யாதவ், டின்னு யாதவின் மருமகன் ஆவார். டின்னு, தன் மருமகனை நன்கொடை எண்ணும் குழுவில் நியமித்திருந்தார்.'திருட்டு குறித்த புகாரை சம்பத் ராய் கண்டுகொள்ளவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவரை விசாரிக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் கூறுகின்றனர். அறக்கட்டளையின் இன்னொரு உறுப்பினரான, அனில் மிஸ்ரா நன்கொடை எண்ணும் பொறுப்பில் இருந்தார். இவருக்கு அயோத்தியில் ஒரு பெரிய குடியிருப்பு இருப்பதுடன், ஐந்து ஆண்டுகளில் இவரது சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. நன்கொடை முறைகேடு விவகாரம் ஆளும் பா.ஜ., அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

jkrish
ஜூன் 29, 2026 04:31

செய்தியில் உள்ளது போல் அல்ல .. கோவில் கட்டியபின் பொது தேர்தலில் முந்தைய வெற்றி கிடைக்கவில்லை என்பது அறிந்ததே


seshadri
ஜூன் 28, 2026 22:54

உன்னை மாதிரி ஹிந்து பெயர் வைத்து கொண்டு கிறிஸ்தவனாக இருப்பது மகா கேவலம். நீயெல்லாம் உன் மாதத்தில் இருக்கு ஓட்டைகளை கண்ணை திறந்து பார். எங்கள் மதத்து பிரச்னைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம். முதலில் உங்கள் மாதத்து பிஷப் கல்லிங்கல் கேரளத்தில் ஒரு பெண் பாதிரியை பலாத்காரம் செய்த வழக்கு என்ன ஆயிற்று என்று பார்.


சண்முகம்
ஜூன் 28, 2026 22:24

மோடி ஐயா, கிள்ளுறா மாதிரி கிள்ளுங்க!


வில்லிபுத்தூரான்
ஜூன் 28, 2026 22:09

ட்ரைவர் மேல் பழியைப் போட்டு முக்கியத் திருடர்கள் தப்பிக்கிறார்கள்.


Thirumal s S
ஜூன் 28, 2026 21:21

இது மாதிரியான செய்திகள் ஏன் வெளியே வருகிறது என்று இருக்கலாம்


Gokul Krishnan
ஜூன் 28, 2026 19:58

பரவாயில்லை இந்த செய்தி கூட வருகிறது


வில்லிபுத்தூரான்
ஜூன் 28, 2026 18:52

கொள்கைக்காக இருந்தவர்களைப் பின் தள்ளி கொள்ளைக்காக கட்சியில் சேர்ந்தவர்களே அதிகம். காங்கிரஸின் ஊழல் கொள்ளைக் கலாசாரம் பாஜகவில் பரவுகிறது. விரைவில் பாஜக மக்களிடம் தன் பெயரை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.


venugopal s
ஜூன் 28, 2026 17:15

நாட்டுப்பற்று ,மதப்பற்று ,கடவுள் நம்பிக்கை எல்லாம் பணத்தைக் கண்டால் பறந்தோடி விடுமோ?


ம பு மன்னார்சாமி
ஜூன் 28, 2026 16:56

சங்கர் ராய் கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிப்பதை தவிற வேற என்ன வேலை? தன் டிரைவரிடமா எல்லா பொறுப்பையும் ஒப்படைப்பது.


அப்பாவி
ஜூன் 28, 2026 14:19

சாதனை எல்லாம் பேசவே இல்லியே.