உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகம்; 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை

பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகம்; 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை

சென்னை: தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சமீபத்தில் டில்லியில் நடந்தது. அதன் பின், அவர் தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் சிலரை தனியாக அழைத்து பேசியுள்ளார். அப்போது அமித் ஷா கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ரவுடிகளை வைத்து அராஜக அரசியலில் ஈடுபட்டார். அவரது ஆட்சியை, மக்கள் துணையுடன் பா.ஜ., அகற்றி விட்டது. அடுத்த இலக்கு தமிழகம் தான். பிரதமர் மோடியை, தமிழக மக்கள் விரும்புகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hk8a4eic&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, மாநில தலைமை ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க வேண்டும். வரும் 2029 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். விரைவில் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகம் அனுப்பப்படுவர். அவர்கள் வாயிலாக, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, த.வெ.க., அரசின் தவறுகளையும் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பிரேம் குமார்
ஜூன் 16, 2026 15:19

அமித் ஷாவின் அடுத்த இலக்கு தமிழகத்தின் நாடாளுமன்ற எண்ணிக்கையை அதிகரிப்பது . தற்போதைய நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் தான் எம்பிக்கள் இருக்கிறார்கள். இதில நம்பிக்கை அதிகமாக தருவது மாநில கட்சி என அவர் யோசிக்கிறாரோ என தோன்றுகிறது


பிரேம் குமார்
ஜூன் 16, 2026 15:11

தமிழகத்தில் திமுக வில் ஸ்டாலினுக்கு எதிராக பிளவை உண்டாக்க எந்த நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் ஒரு அணியை உருவாக்க அமித் ஷா யோசிக்கிறாரா


பிரேம் குமார்
ஜூன் 16, 2026 15:00

தமிழகத்தில் திமுக வில் ஸ்டாலினுக்கு எதிராக பிளவை உண்டாக்க கனிமொழி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஒரு அணியை உருவாக்க அமித் ஷா யோசிக்கிறாரா


Aaron
ஜூன் 16, 2026 13:32

First try winning 20 ward councillors. That itself difficult for BJP in TN


kumar
ஜூன் 16, 2026 13:28

no chance


bharathi
ஜூன் 16, 2026 13:15

Already 39 is there ...they can support BJP unconditionally as they have no moral or ethic in politics


venugopal s
ஜூன் 16, 2026 06:38

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வழித்துத் துடைத்து விட்டது தவெக அலை. இதில் இருபது எம் பி க்களா? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியவில்லையா?


Nathan
ஜூன் 16, 2026 06:31

முதலில் நோட்டாவை ஜெயிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் பின்னர் மற்ற கட்சிகள் உடன் போட்டியிடலாம். நாலு மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்களின் ஆலோசனையை கேட்டு கட்சி நடத்தும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும். பின்னர் மக்கள் செல்வாக்கு உள்ள நபர்களை முன்னிருந்த வேண்டும். இல்லையேல் நோட்டா தான் உங்களை முந்தி நிற்கும்


முக்கிய வீடியோ