உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு

திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு

திருப்பதி: திருமலை அடிவாரத்தில், தனியார் நிறுவனத்துக்காக மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ரத்து செய்தார்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

கடும் எதிர்ப்பு

இதற்கு முன், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்தபோது, திருமலை அடிவாரத்தில் அலிபிரி அருகே, 35.32 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனத்துக்கு மும்தாஜ் ஹோட்டல் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.தங்கும் அறைகள் உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் ஹோட்டல் கட்ட தீர்மானிக்கப்பட்டது.இதற்கு, திருப்பதி தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், சைவ உணவு வகைகள் மட்டுமே விற்கப்படும் என, மும்தாஜ் ஹோட்டல் தரப்பு கூறியது. ஆட்சி மாற்றத்துக்கு பின், இது தொடர்பாகவும், தேவஸ்தானத்தில் ஹிந்து அல்லாதோர் பணிபுரிவது குறித்தும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கடிதம் எழுதினார். இந்நிலையில், தன் பேரன் பிறந்த நாளையொட்டி தரிசனத்துக்காக, முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திருமலைக்கு வந்தார்.தரிசனத்துக்கு பின், அவர் கூறியதாவது: திருப்பதியின் ஏழு மலைகளும் ஏழுமலையானுக்கே சொந்தம். அந்த மலைகள் புனிதமானவை. எனவே, முந்தைய ஆட்சியின் போது, அலிபிரி அருகே 35.32 ஏக்கரில் மும்தாஜ் ஹோட்டல் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

பணி இடமாற்றம்

திருப்பதியில் எந்த விதமான வர்த்தக நோக்கங்களுக்கும் இடம் கிடையாது. எந்தவொரு தனி நபருக்கும் அதற்கான அனுமதி கிடையாது. இதுபோல, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் கோவிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவர். ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் வேறு இடங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்படுவர்.நாடு முழுதும் அனைத்து மாநில தலைநகரிலும் வெங்கடேஸ்வரா கோவில்கள் கட்டப்படும். இதற்காக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும். வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களின் விருப்பத்துக்கேற்ப, அங்கும் கோவில்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமாலின் பெருமை

கடந்த 2003-ல் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, திருப்பதி அருகே அலிபிரியில் நக்சல்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தார். அந்த தாக்குதலை நேற்று நினைவு கூர்ந்த சந்திரபாபு நாயுடு, “24 கண்ணிவெடிகளில் சிக்கிய எவரும் உயிர் பிழைக்க முடியாது. ஆனால், அத்தகைய தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தேன். தற்போது நான் வாழ்வதில் இருந்தே, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் மிகப்பெரும் சக்தியை புரிந்து கொள்ளலாம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Natchimuthu Chithiraisamy
மார் 28, 2025 12:41

உங்கள் குடும்பம் வாரிசுகள் பல்லாண்டு வாழ்க.


R S BALA
மார் 24, 2025 19:44

இவரின் இந்த அதிரடி நடவடிக்கை இந்துக்களுக்கு அவ்வளவு ஆறுதலாகவும் நிம்மதியாகவும் உள்ளது ஆனால் தமிழகத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக இருப்பது பெரும் வேதனை காலக்கொடுமை. அண்ணாமலை முதல்வரானால் இங்கும் இந்துக்களுக்கு இவையெல்லாம் நடக்கும்..


B MAADHAVAN
மார் 22, 2025 20:58

நாயுடு அண்ணா, கோவில்களுக்கு நியாயமான முறையில் ஆதரவு அளித்து, சரியான முடிவு எடுக்கும் உங்களை போன்ற நல்லவரின் ஆட்சி எங்கள் தமிழகத்திலும் பரவ வேண்டும் என்பது தான் இங்கு பெரும்பாலானோரின் விருப்பம். நிறைவேற அன்பு பிரார்த்தனைகள். வாழ்த்துக்கள். .


ManiK
மார் 22, 2025 20:13

சந்திரபாபு காரு ப்ளீஸ் இந்த தமிழ்நாட்டின் மங்கிய மநதிரிகளையும் கொஞ்சம் வழிநடத்துங்க...அவர்களை ஹிந்துக்களின் உணர்வுகளை மதித்து நடக்க சொல்லுங்க.


Baskar
மார் 22, 2025 19:56

நன்றி அய்யா


अप्पावी
மார் 22, 2025 15:54

பேரை மாத்திட்டு வாங்க. முத்தம்மா என்கிற மும்தாஜ் நு வெய்யுங்க. நாய் விற்ற காசு குரைக்காது.


karthik
மார் 22, 2025 14:22

தமிழ் நாடாக இருந்தால் நாங்கள் கோவில் வாசலிலேயே கோவில் சுவரை ஒட்டியே பீப் பிரியாணி கடை மட்டன் கடை எல்லாமே நடத்துவோம் அது தன திராவிட மாடல்


aaruthirumalai
மார் 22, 2025 14:13

சரி


babu
மார் 22, 2025 10:44

tha great Babu naidu


சண்முகம்
மார் 22, 2025 10:24

சரியான முடிவு. திரவிக்ஷ கூட்டமாக இருந்தால் இந்நேரம் மலையிலே பிரியாணி கடை போட்டிருப்பார்கள்.


முக்கிய வீடியோ