உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி.சி.,க்கள் இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாதா?

வி.சி.,க்கள் இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாதா?

சென்னை: ''அமைச்சர் உதயநிதியை விமர்சிப்பதை கட்சி ஏற்றுக் கொள்ளாது. தனிநபர்களை விமர்சிப்பதை ஆதரிக்கவும் செய்யாது. அதேசமயம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு கூறினார்.

அவரது பேட்டி:

தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலை சந்தித்தன. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தோம். வட மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியைப் பிடித்த சூழலில், தமிழகத்தில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க., கூட்டணியில் இணைந்தோம். எங்களுக்கு 6 தொகுதிகளை கொடுத்தாலும், இடங்கள் முக்கியமல்ல, இலக்கு தான் முக்கியம் என, சேர்ந்தோம். நாங்கள் பெற்ற வெற்றிக்கு, தி.மு.க.,வின் ஓட்டு மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளும் காரணம். இது எங்களுக்கு மட்டுமல்ல, கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். நாங்கள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என சொல்வது கூட்டுமுயற்சியின் பின்னடைவாகத்தான் பார்க்க முடியும். ஒரு கூட்டணி அமைத்து, புரிந்துணர்வு ஏற்பட்டு ஓட்டுகளைப் பெற்று இருக்கிறோம். எனவே, விடுதலை சிறுத்தைகளின் வெற்றியில், இடதுசாரிகளின் பங்கு இருக்கிறது. தி.மு.க.,வின் வெற்றியில் வி.சி., பங்கு இருக்கிறது. இந்த வெற்றி என்பது எல்லாரும் சேர்ந்து எடுத்த வெற்றியாகத்தான் பார்க்கிறோம்.ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது கட்சியின் இலக்கு. எங்கள் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு விரும்புகிறோம். திருமாவளவன் முதல்வராக வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் கட்சியை துவக்கியுள்ளோம். அந்த அடிப்படையில் தான் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்ற, கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில் தான் தொடர்கிறோம். திருமாவளவனும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். வடமாவட்டங்களில் வி.சி., இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாது என, எங்கள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து ஏற்புடையதல்ல. அது அவருடைய சொந்தக் கருத்து. அமைச்சர் உதயநிதியை அவர் விமர்சித்ததையும் கட்சி ஏற்றுக்கொள்ளாது. தனிநபர்களை விமர்சிப்பதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.அதேநேரத்தில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது கட்சியின் கோட்பாடு, நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

nagendhiran
செப் 25, 2024 22:19

திமுக இல்லைனா விசிகவுக்கு வைப்பே வராது என்பது தான் உண்மை?


அஸ்வின்
செப் 25, 2024 19:16

எனத்த பங்கு கமிசன் ல பங்கு னு சொல்லு


Balasubramanian
செப் 25, 2024 18:38

விசிக என்ன காயலாங்கடை காங்கிரஸ் இல்லாமல் கூட வெல்ல முடியாது! பா.ஜ.க.உடன் ஒண்டிக்கு ஒண்டி மோத தயாரா? 2026 எல்லா கட்சிகளும் தனித்து களம் இறங்குங்கள் ! பார்த்து விடலாம் ஒரு கை!


ஆரூர் ரங்
செப் 25, 2024 17:52

வெறும் ஒன்றரை சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுக அதிமுக கூட்டணிகள் பலமுறை தோல்வியடைந்தது வரலாறு. அதனால்தான் சின்னச்சின்ன மாவட்ட கட்சிகளுக்கும் இடம் தருகிறார்கள். கொள்கை கூட்டணி என்பது அபூர்வம். எல்லாமே சீட்டுக்குத்தான்.


அருணாசலம்
செப் 25, 2024 14:07

அப்போ இதுவும் ...னி அரசுவின் சொந்தக் கருத்தா?


ram
செப் 25, 2024 13:58

சபாஸ் சரியான போட்டி.. நாங்க ஒரு வெக்கங்கெட்ட கூட்டம் நீங் ஒரு மானங்கெட்ட கூட்டம் .. இதுதான் இந்த இரரண்டு ககட்சிக்கும் உள்ள நெருக்கம்.


Rajasekaran
செப் 25, 2024 13:54

திராவிட மாடல் ஆட்சி மீது உதயநிதிக்கு நம்பிக்கை, தைரியம் இருந்தால் தனியாக நின்று காட்டவும்


வைகுண்டேஸ்வரன்
செப் 25, 2024 11:28

தமிழ் நாட்டில் இருக்கும் 19% sc/st பிரிவினரில், ஒரு 15% நன்கு படித்ததால் வேற வேற கட்சிகளின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். வெறும் 3% மட்டும் அடங்க மறு, தொடங்க மறு ன்னு சொல்லிக்கிட்டு திரிகிறார்கள். இவர்களை திருமா, பிஜேபியிடம் அடகு வெச்சுட்டார்.


வைகுண்டேஸ்வரன்
செப் 25, 2024 11:22

சரியான விதத்தில் பிஜேபி காய் நகர்த்தி திருமா வை வாங்கிவிட்டது. புரோக்கர் ஆதவ் அர்ஜுன் கொடுத்த வேலையை சரியாக செய்து விட்டார். திருமா இனி உனக்கு மூலைத் தெரு மா. ஓரமா உக்காந்து, EPS, OPS, சீமான் மாதிரி முனகிக் கொண்டிருக்கவும். தமிழிசை க்கு போட்ட மாதிரி ஏதாவது போடுவாங்க.


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:47

திருட்டு கும்பல் எப்படியெல்லாம் நாடகம் போடுகிறார்கள். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு ஓட்டு போடுவதும் தற்கொலை செய்வதும் ஒன்றே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை