உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி மல்டி ஸ்பெஷாலிட்டி எப்படி?

வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி மல்டி ஸ்பெஷாலிட்டி எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: வேலுார் மாநகரின் மையப்பகுதியில், 1882ல் பென்லேன்ட் அரசு மருத்துவமனை துவங்கப்பட்டு, 1915ல் மேம்படுத்தப்பட்டது.வேலுாரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவ கல்லுாரி, 2005ல் துவங்கப்பட்டது. இதனால், இந்த மருத்துவமனை அதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது.தற்போது, இந்த பென்லேன்ட் மருத்துவமனை, அவசர சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், 2023ல், 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக கட்டப்படும் என, அரசு அறிவித்தது.அதன்படி, 4 லட்சம் சதுரடியில், ஏழு மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் உட்பட, 10 துறையை சேர்ந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிகள் இங்கு உள்ளன. 10 அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர மற்றும் விபத்து தொடர்பான வழக்குகளுக்கு தனி வார்டுகள், புற்றுநோய் சிகிச்சை, மயக்க மருந்து மற்றும் எக்ஸ்ரே அறையும் கட்டப்பட்டுள்ளது.

முன்வராத மருத்துவர்கள்

இதற்காக, 300க்கும் மேற்பட்ட டாக்டர் மற்றும் நர்ஸ், இதர பணியாளர்கள் என, 700க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு பணியிடம் கூட புதிதாக நியமிக்கவில்லை. இந்நிலையில், வேலுாருக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், இம்மருத்துவமனையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்.இங்கு பணிபுரிய மல்டி ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் யாரும் முன்வராததால், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்துறையை இங்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுஉள்ளனர்.அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், மாதத்திற்கு 850 பிரசவங்கள் நடக்கின்றன. அங்கு, 50 டாக்டர்கள் தேவை. தற்போது, 31 பணியிடங்கள் தான் உள்ளன. அதிலும், எட்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் தற்போது பணியில் உள்ள டாக்டர்கள் கடும் பணிச்சுமையில், மன உளைச்சலில் உள்ளனர்.அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள்பிள்ளை கூறியதாவது:பிரமாண்ட கட்டடங்களை உருவாக்குவதே சிறந்த சுகாதார கட்டமைப்பு என, தமிழக அரசு நினைக்கிறது; அது முற்றிலும் தவறு. நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர், நர்ஸ் பணியிடங்களை நிரப்புவது மிகமிக அவசியம்.

பணியாளர்கள் இல்லை

புதிதாக மேம்படுத்தி கட்டப்பட்ட சேலம், திருநெல்வேலி, கிண்டி போன்ற அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர், நர்ஸ் உட்பட பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அம்பி ஐயர்
ஜூன் 23, 2025 20:20

டாக்டர் நர்ஸ் தான் மருத்துவம் பார்க்கணுமா என்ன....???!!! ஸ்வீப்பர் வார்டு பாய் இவங்க மட்டுமே போதுமே.... திராவிட மாடல் ஆட்சியில்....


Ramesh Sargam
ஜூன் 23, 2025 20:14

டாக்டர், நர்ஸ் இல்லாவிட்டால் என்ன, மருத்துவமனை கேன்டீனில் சூடா இட்லி, வடை கிடைக்கும். போய் தின்னலாம் வாங்க.


Ramesh Sargam
ஜூன் 23, 2025 20:01

ஊழல் ஆட்சியில் எதுவும் சரியில்லை.


Bhaskaran
ஜூன் 23, 2025 19:35

மருத்துவர் செவிலியர்கள் தவிர அனைத்து பணிகளும் ஒப்பந்த முறையில் விடுவார்கள்


Prabakaran J
ஜூன் 23, 2025 18:08

operation success patient failure,vidiyal inna pannum mudiyum pavam


lana
ஜூன் 23, 2025 12:54

முதலில் எல்லா மருத்துவமனை க்கும் போதுமான அளவுக்கு தண்ணீர் வசதி செய்யுங்கள் பிறகு கழிவறை மற்றும் அதை சுத்தம் செய்ய ஆட்கள் நியமனம் செய்ய வேண்டும். பிறகு மருத்துவர்கள் மற்றும் பணியாளர். அப்போது தான் அந்த மருத்துவமனை சுத்தம் ஆகவும் சுகாதாரம் ஆகவும் இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் எந்த அரசு மருத்துவமனையில் உம் இவை இருப்பது இல்லை. இதை விட்டுவிட்டு கோடி கணக்கில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி அதை செயல்படுத்த பணியாளர்கள் இன்றி நமது வரிப்பணம் வீணடிக்க படுகிறது. அதே போல கட்டிடங்கள் மட்டுமே கட்டி கமிஷன் அடித்து விட்டு அங்கு உரிய அளவில் பணியாளர்கள் இல்லை என்றால் பிரச்சினை தான். இதனால் தான் மருத்துவமனையில் பல தாக்குதல் கள் நடக்கிறது. எல்லோரும் மனிதர்கள் தானே. noyaali க்கு எனக்கு உடனே சரியான சிகிச்சை என்ற நிலை. மருத்துவர்கள் க்கு ஓய்வு இன்றி கூடுதல் பணிகள். இருவரும் பாவம். ஆனால் விடியல் அரசு விளம்பரம் செய்ய மட்டுமே நேரம் இருக்கிறது. கேள்வி கேட்டால் முந்திரி பின்னால் சில பல sir கள் நின்று கொண்டு முறைப்பது மிரட்டுவது.


ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 11:43

மூளை இல்லாமலே சிலரால் முதல்வராக முடிகிறது. டாக்டர் இல்லாம ஆஸ்பத்திரி நடத்த முடியாதா?.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 23, 2025 11:18

இந்த ஆஸ்பத்திரி கேண்டீன்ல டாஸ்மாக் சரக்கு கிடைக்குமா


T. சங்கரநாராயணன், ஈரோடு
ஜூன் 23, 2025 08:39

ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் டாக்டர் நர்ஸ் இல்லாமலும் மருத்துவமனை திறக்கலாம்


Saravanan
ஜூன் 23, 2025 09:06

Without a patient and doctor hospital will run


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை