உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குடமுழுக்கை புறக்கணிக்கும் முதல்வர்: சேகர்பாபு விளக்கம்

குடமுழுக்கை புறக்கணிக்கும் முதல்வர்: சேகர்பாபு விளக்கம்

சென்னை: 'இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சிக்காமல் இருப்பவர், முதல்வர் ஸ்டாலின். அதுவே, இறைவனை வணங்குவதற்கு சமம்', என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தபின், அவர் அளித்த பேட்டி: திருசெந்துார் முருகன் கோவில் குடமுழுக்கு விழா, தமிழிலும் நடைபெறும். ஏற்கனவே, இது தொடர்பாக, நீதிமன்றத்தில் நாங்கள் கூறி விட்டோம். இந்த ஆட்சியில்தான், மருதமலையில் உலகிலேயே உயரமான 184 அடி முருகன் சிலை நிறுவப்பட உள்ளது. மேலும், 826 கோவில்களில், 1,306 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று உள்ளன.நாத்திகர்கள், ஆத்திகர்கள் ஒன்று சேர்ந்து, கொண்டு வந்த இந்த அரசு, 3,117 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி உள்ளது. ஒரு கோவில் குடமுழுக்கில் கூட, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்கின்றனர். ஒருவரது வழிபாட்டு உரிமையில் தலையிடுவது நாகரிகம் அல்ல.இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சனம் செய்வது; எதிர் கருத்தை கூறுவது என்பதை வாடிக்கையாகக் கொள்ளாதவர், முதல்வர் ஸ்டாலின். அதுவே, இறைவனை வணங்குவதற்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

vijai hindu
ஜூன் 26, 2025 23:13

குடமுழுக்கு நல்லபடியா நடக்கணும் அதுக்கு வேண்டாத ஜந்துக்கள் தேவையில்லை


Ramesh Sargam
ஜூன் 26, 2025 22:45

முதல்வர் அவராக விமர்சிக்க மாட்டார். ஆனால் தனது மந்திரி சபையில் உள்ள மகேஷ் போன்றவர்கள் மூலம் ஹிந்துக்களை விமர்சிப்பார். உதாரணம்: திருநீறு, குங்குமம், ருத்ராட்சம் அணியக்கூடாது என அமைச்சர் மகேஷ் கூறி இருக்கிறார். இதை மகேஷ் கூறி இருக்க மாட்டார். ஆனால் முதல்வர், மகேஷ் மூலம் கூறி இருக்கிறார். ஹிந்துக்கள் என்றால் முதல்வருக்கு அவ்வளவு துவேஷம்.


theruvasagan
ஜூன் 26, 2025 17:47

நாம் நடத்தும் சுப காரியங்களுக்கு நம்மிடம் விரோதம் பாராட்டும் நம்மை வெறுக்கும் ஒருவன் வந்து கலந்து கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது நமக்கு கவுரவமா அசிங்கமா. அசிங்கத்தை தேடி நாமே ஏன் போக வேண்டும். அதை அடியோடு புறக்கணிப்பதுதான் நமக்கு மரியாதை.


theruvasagan
ஜூன் 26, 2025 17:41

184 அடி முருகன் சிலை நிறுவப்பட்டது அரசாங்க பணத்திலா இல்லை கட்சி நிதியிலிருந்தா. பக்தர்கள் நன்கொடை பணத்தைத்தானே போட்டு செய்துள்ளார்கள். ஊரான்வீட்டு காசை உங்க கைக்காசை போட்டு செலவழித்த மாதிரி ஸ்டிக்கர் ஒட்டுவது கேவலமாக இல்லை.


suresh guptha
ஜூன் 26, 2025 17:12

இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சிக்காமல் இருப்பவர், முதல்வர் ஸ்டாலின். அதுவே, இறைவனை வணங்குவதற்கு சமம், என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். GREAT QUOTE,FRAME IT TARE THE BAGAVATH GEETHA,RAMAYANA AND MAHABARATHA EVEN VEDHAS, PREACHES OF SEKAR BABU TO BE FOLLOWED


seshadri
ஜூன் 26, 2025 14:37

நமது ஹிந்து மதம் மீது நம்பிக்கை இல்லாத ஸ்டாலின் மற்ற அமைச்சர்கள் யாரும் வராமல் இருந்தாலே போதும். ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் மற்ற பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் இந்த மாதிரி ஆட்கள் எனக்கு முதல்வரும் இல்லை அமைச்சர்களும் இல்லை. இவர்களும் எனக்கு ஒரு சாதாரண மனிதர் மட்டுமே. இவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதையை. மாண்புமிகு எல்லாம் கிடையாது.


Narayanan
ஜூன் 26, 2025 13:10

எத்துணை குடமுழுக்கு செய்திருந்தாலும் அவை அனைத்தும் கோவில் பணம்தானே தவிர அரசு பணமோ . உங்க அப்பன்வீட்டு பணமோ, ஸ்டாலின் வீட்டு பணமோ இல்லையே சேகர்பாபு . முதலில் கோவில் கட்டணம் அனைத்தையும் நிறுத்துங்கள் . நீங்களும் அறநிலையத்துறையும் வெளியேறுங்கள் . பக்தர்கள் நடத்திக்கொள்வார்கள் . பக்தர்கள் நடத்திக்கொண்டதையும் வெட்கமேயில்லாமல் ஸ்டிக்கர் ஓட்டும் கேவலம் .


Enrum anbudan
ஜூன் 26, 2025 12:40

கடவுளே இல்லேன்னு சொல்ற ஒருவன் அது எல்லா மதங்களிலும் அப்படியே பாவிக்க வேண்டும். சேகர் நீ சொல்ற கம்பி கற்ற கதை எங்களுக்கு வேண்டாம்.


Kulandai kannan
ஜூன் 26, 2025 11:31

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றவரை தந்தை என்பவர் தானே முதல் மந்திரி ஸ்டாலின். அது வழிபாட்டில் தலையீடு இல்லையா?


angbu ganesh
ஜூன் 26, 2025 11:06

ஹிந்துக்களே இவர்களையும் புறக்கணியுங்கள் அழியும் காலம் வந்தா இப்படித்தான்


suresh guptha
ஜூன் 26, 2025 17:13

VINASA KALE VIPEETHA BUDHI


புதிய வீடியோ