உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; அழைப்பாளர்களை அழைக்க உத்தரவு

பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; அழைப்பாளர்களை அழைக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக அரசு பள்ளிகளில், மன்ற செயல்பாடுகளாக, மாதத்துக்கு ஒரு சிறார் சினிமா திரையிடப்படுகிறது. அதிகபட்சம், 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய படங்களை, தலைமை ஆசிரியர்கள், மாலை வேளையில் திரையிடுகின்றனர்.இந்நிலையில் ஜனவரியில், பள்ளிகளில் சினிமா திரையிடப்படும் விதம் குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 'டீரிம் ஆப் ட்ரீ' எனும், 33 நிமிடம் ஓடக்கூடிய சிறார் சினிமா, 'எமிஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திரையிடும்போது, சிறப்பு அழைப்பாளர் வரவழைக்கப்பட்டு, ஒளிபரப்பு முடிந்த பின், சினிமா குறித்த விமர்சனம், கருத்து, மாணவ, மாணவியரின் விமர்சனம் என, 2:30 மணி நேரத்துக்கு கூட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால் தகுதியான சிறப்பு அழைப்பாளர்களை தேடி பிடிக்கும் பணி, தற்போது கூடுதலாக சேர்ந்துள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 15, 2025 21:12

தேவையில்லாத ஒரு செயல்.


Arul Narayanan
ஜன 15, 2025 15:30

தேடுதல் வேலை எல்லாம் இருக்காது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர் லிஸ்ட் அனுப்பி வைக்க படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை