உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செப்டம்பரில் மதுரையில் மாநாடு; 100 வேட்பாளர்கள் அறிவிப்பு: விஜய் தீவிரம்

செப்டம்பரில் மதுரையில் மாநாடு; 100 வேட்பாளர்கள் அறிவிப்பு: விஜய் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கம் துவங்கி, விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டிய நடிகர் விஜய், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தையும் பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8dx20kxd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்க முடியாததாக இருப்பதாகச் சொல்லி, அ.தி.மு.க., தரப்பு அமைதி காத்தது.இதற்கிடையில், அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைக்க முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்று விட்டது. இதனால், தனித்து போட்டியிட்டு, பலத்தை நிரூபிப்பதென முடிவெடுத்திருக்கும் நடிகர் விஜய், அதற்கான பணிகளில் களம் இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, மதுரையில் வரும் செப்டம்பர் மாதம் மாநில மாநாட்டை நடத்தி, அடுத்தாண்டு தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட, நடிகர் விஜய் திட்டமிட்டு உள்ளார்.

இதுகுறித்து, த.வெ.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில், தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க.,வை வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருக்கிறார்.அதற்காக, தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறார். கட்சிக்கு 120 மாவட்டச்செயலர்களை நியமித்து உள்ள அவர், மாநிலம் முழுதும் உள்ள, 66,000 ஓட்டுச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் ஏஜன்டுகளை நியமிக்கும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.தேர்வு செய்யப்பட்ட கோவை மண்டல ஏஜன்டுகளுக்கு, இரண்டு நாள் பயிற்சி முகாம் நடித்தி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கான முகாம், காஞ்சிபுரத்தில் விரைவில் நடக்கவுள்ளது. அடுத்தடுத்தும், மண்டல ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கான முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கிடையில், வரும் செப்டம்பர் மாதம் கட்சியின் மாநில மாநாட்டை, மதுரையில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதில், முதற்கட்டமாக 100 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை, தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்திடம், விஜய் ஒப்படைத்து உள்ளார். அவர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின், தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து, தொகுதிக்கு மூன்று பேர் அடங்கிய பட்டியலை விஜயிடம் வழங்க உள்ளனர்.அதில் இருந்து, வேட்பாளர்களை இறுதி செய்து, அதை மாநாட்டில் அறிவிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Balasubramanian
மே 14, 2025 14:41

இது ஒண்ணும் கட்டவுட்டுக்கு பால் ஊத்தும் விவகாரம் இல்லை! ஊத்திக்கும் விவரமான ஆள் இல்லை என்றால்!


Mecca Shivan
மே 14, 2025 14:37

சினிமா செய்திகளில் போடவேண்டியது


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 14, 2025 11:39

இதற்கு முன்பு நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியில் தமிழகம் முழுதும் வேட்பாளர் அறிவித்தார்.. ஆனால் நடந்தது தேர்தலுக்கு முன்பு அனைத்து வேட்பாளர்களும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது பற்றி நாடே அறியும்.. அது போலத்தான் இதுவும்..... கடைசியில் காமெடியாக முடியும்.


ராமகிருஷ்ணன்
மே 14, 2025 11:01

ஓவர் பில்டப் TVK கட்சிக்கு ஆவாது விஜய். அடக்கி வாசி.


Haja Kuthubdeen
மே 14, 2025 11:00

விஜய் தனித்து நின்றால் ஓட்டுக்கள் வாங்க முடியுமே தவிற ஒரு சில எம் எல் ஏக்கள் விஜய் உட்பட வெற்றி பெறலாம்.மற்ற படி எதும் ஆகாது.விஜய் சிந்தித்து நல்ல முடிவு எடுப்பதே அவருக்கு நல்லது.திமுகவை வீழ்த்தனும் என்று நினைத்தால் விஜயகாந்த் போல முடிவு எடுக்கனும்.


ஆரூர் ரங்
மே 14, 2025 10:19

இவரையும் ஒரு அரசியல்வாதி ன்னு நெனச்சு செய்தி போடுற உங்கள என்ன செய்யுறது?


angbu ganesh
மே 14, 2025 10:06

அடுத்த காமெடி மாநாடு ரெடி ரோலிங் ஆக்க்ஷன் இன்னும் என்னவெல்லாம் பாக்கவேண்டி இருக்கோ


பேசும் தமிழன்
மே 14, 2025 07:34

நூறு என்ன....... ஆயிரம் வேட்பாளர்களை கூட அறிவிக்கலாம்..... ஆனால் என்ன பயன்..... தம்படிக்கு பிரயோசணம் இல்லை !!!


pmsamy
மே 14, 2025 07:25

விஜய் அவர்களே அரசியலுக்கு வாங்க ஆனா அவசரப்படாதீங்க பொறுமையா தான் முன்னேற முடியும்


angbu ganesh
மே 14, 2025 10:07

அவர் முன்னேறணுமா இல்ல தமிழ் நாடா தமிழ் நாடு முன்னேறணும்னா தீயமுக்கா அணில் போன்ற ஆட்கள் நாட்டில் இருக்க கூடாது


புதிய வீடியோ