உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொகுதி மறு வரையறை விவகாரம்: திமுக - காங்கிரஸ் கடும் மோதல்

தொகுதி மறு வரையறை விவகாரம்: திமுக - காங்கிரஸ் கடும் மோதல்

சென்னை: 'லோக்சபா தொகுதி மறு வரையறை விவகாரத்தில், தமிழகத்தில் மட்டும் வேண்டாம் என்ற நாடகம் ஏன்' என, தி.மு.க., - எம்.பி., தயாநிதி எழுப்பிய கேள்விக்கு, 'தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதால் எதிர்க்கிறோம்' என, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

இருவரின் அறிக்கை விபரம்:

தயாநிதி: லோக்சபா தொகுதி மறு வரையறையை ஆதரித்த தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியை கேள்வி கேட்க காங்., துணியுமா? தொகுதி மறு வரையறை நடந்தால், தெலுங்கானா மாநிலத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என, ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது ஏன்? தமிழகத்தில் த,வெ.க., அரசை துாண்டி விட்டு, தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக எம்.பி.,க்கள் கூட்டம் என நாடகம் அரங்கேற்றிய காங்.,கின் உண்மையான நிலைப்பாடு என்ன? நியாயமான தொகுதி மறு வரையறை என்ற நிலைப்பாட்டில் இருந்து, தொகுதி மறு வரையறை வேண்டாம் என, 'பல்டி' அடித்திருப்பது, தமிழகத்தில் மட்டும் தானா; அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா? காங்., ஆளும் மாநிலங்களில் இப்படியான எம்.பி.,க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. மாணிக்கம் தாகூர்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்வைத்தது, பா.ஜ.,வின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு வரையறையை அல்ல. குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்கள், தங்கள் பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்பதற்காக, மாநில பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை தான். ஒட்டுமொத்த தென் மாநிலங்களையும் வஞ்சித்து, வட மாநிலங்களுக்கு சாதகமாக பா.ஜ., கொண்டு வரத் துடிக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான ஒருதலைபட்ச தொகுதி மறு வரையறையை தான், தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என, காங்., எதிர்க்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

krishna
ஆக 11, 2026 20:13

INDHAC2 KATCHIGALUM ULAGA MAHA KEVALA DESA VIRODHA MAFIA KUMBAL. IDHULA FIGHTING VERA.ADITHU KONDU SATTAI VETTI KIZHINJU ALAYUNGA.


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஆக 11, 2026 17:09

திமுக, காங்கிரஸ் கடும் மோதல் என்றால் கட்டி புரண்டு, வேட்டி சட்டை கிழிய சண்டை போட்டார்களா, தெளிவாக போட்டோ வீடியோ போடவும்


ஹரிநாதறன்
ஆக 11, 2026 14:58

25 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு எம்பி என்று தீர்மானம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை மட்டுப் படுத்தி பாராளுமன்றம் அமைக்கலாம்


velan
ஆக 11, 2026 13:56

முதுகில் குத்தும் எட்டப்ப துரோகிகள் யார் காலை எப்போது வருவார்கள் தெரியாது .. கவனம் தேவை


Rajasekar Jayaraman
ஆக 11, 2026 12:03

மmuttaalகளின் முரட்டு வாதம்.


T.S.SUDARSAN
ஆக 11, 2026 10:59

எதுவும் குறையாது. தெரிந்துகொள்ளவும். பொய் புரட்டுகளை நம்பவேண்டாம். தமிழ்நாட்டுக்கு நன்மையே.


Sundar R
ஆக 11, 2026 07:09

தொகுதி மறு சீரமைப்பு விஷயத்தில், புவியியல் ரீதியாக [GEOGRAPHICAL SIZE] தென் மாநிலங்கள் அனைத்தும் வட மாநிலங்களை விட பரப்பளவில் சிறியதாகவும், மக்கள் தொகையின் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்கும் போது, மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு என்னவோ மிகவும் குறைவான சீட்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போல, எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும், பொதுவெளியிலும் மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமாஷ் களி போன்று, போலித்தனமாக மல்யுத்த குஸ்தி போடுவது எவ்வளவு அநியாயம்? என்று தமிழக மக்கள் அனைவரும் வயிறு குலுங்கக் குலுங்க சிரிக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி