உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தெலுங்கர் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்துாரி தலைமறைவு

தெலுங்கர் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்துாரி தலைமறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மொபைல் போனை, 'ஸ்விட்ச் ஆப்' செய்து, நடிகை கஸ்துாரி தலைமறைவாகி இருப்பதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, 'ஹிந்து மக்கள் கட்சி' சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி, 50, பேசுகையில், தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், செய்தியாளர்களை சந்தித்து, 'திராவிடம் என மக்களை ஏமாற்றுவோர் குறித்து தான் பேசினேன். 'தெலுங்கர் குறித்தோ, தெலுங்கு மொழி குறித்தோ, நான் தவறாக பேசவில்லை. என் பேச்சை திரித்து, அதற்கு வேறு காரணம் கற்பித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது' என்றார்.அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தெலுங்கு மக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. என் பேச்சை திரும்பப் பெறுகிறேன்' என்று கூறியிருந்தார்.இதற்கிடையே, 'தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசிய கஸ்துாரி மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் தெலுங்கு அமைப்புகள் புகார் அளித்தன.நடிகை கஸ்துாரி மீது, கலவரத்தை துாண்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' வழங்க, சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்துாரி வீட்டிற்கு, எழும்பூர் போலீசார் நேற்று சென்றனர். வீடு பூட்டியிருந்தது; கஸ்துாரியின் மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. போலீசார் வருவதை அறிந்து, அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sathyanarayanan Sathyasekaren
நவ 11, 2024 23:08

கொத்தடிமை அந்நியமத அடிமை தமிழக அரசுக்கும், போலீஸ்க்கும் இதான் முக்கியமான அதிதீவிரமாக விசாரிக்கவேண்டிய கேஸ். இந்தியா முழுவதும் பயங்கரவாத செயல்கள செய்யும் அந்நிய மதத்தினர், கஞ்சா, போதை கடத்துவ்வோர் எல்லாம் வெளியேருக்கலாம்.


visu
நவ 11, 2024 18:19

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை வருஷ கணக்கா தேடும் தமிழக போலிசுக்கு.... நடிகை கஸ்தூரியை பிடிப்பதா கடினம் எப்படியாவது கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி நீதி பெற்று தருவார்கள் .முக்கியமான வழக்கு பாருங்க


MADHAVAN
நவ 11, 2024 13:21

வீட்ல இருக்குற பெண்களை கண்டுபிடிக்கலாம்,


முருகன்
நவ 11, 2024 10:23

உன்மை என்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்


ஆரூர் ரங்
நவ 11, 2024 11:40

சந்தேகத்துக்குரிய லாக்கப் மரணங்களைப்பற்றி அவர் அறிந்துள்ளார். வக்கீல் ஆயிற்றே.


RAMAKRISHNAN NATESAN
நவ 11, 2024 09:35

சாதி பேதம் கூடாது என்று குரலுயர்த்தும் அதே கும்பல், இவரை சாதி குறித்து பேசி ஆபாசமாக கமெண்ட்ஸ் செய்தது விந்தை .....


RAMAKRISHNAN NATESAN
நவ 11, 2024 09:34

அப்பவே வாயை பூட்டியிருந்தா இப்போ வீட்டைப் பூட்டிட்டு ஓடவேண்டிய அவசியம் வந்திருக்காதுங்கக்கா ....


sankar
நவ 11, 2024 09:21

தவறில்லை


Kanns
நவ 11, 2024 08:42

False Case Instigated-Aided-Pressured by Ruling Party Divisive Loot leaders Misusing Powers& Police


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 11, 2024 08:27

ஒன்றுக்கும் உதவாத வேங்கை வயல் குற்றவாளியையும், அப்பாவி நிரபராதியான செந்தில் பாலாஜியின் தம்பி சுரேஷையும் பிடித்த தமிழக போலிசுக்கு.... நடிகை கஸ்தூரியை பிடிப்பதா கடினம்....தமிழக முதலமைச்சரின் ஆணைக்கினங்க அவரின் வழிகாட்டுதலோடு தம் உயிரை பணயம் வைத்தாவது கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தெலுங்கு மக்களின் உயிர்களை காப்பாற்றுவார்கள் தமிழக அரசும் போலிசாரும்.....!!!


விவசாயி
நவ 11, 2024 07:56

வாயி இருக்குற தால என்னவேனாலும் பேசுனா இப்படித்தான் ஓடி ஒழியனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை