உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சி.பி.எஸ்.இ., புத்தகங்களுக்கு ஹிந்தி பெயர் வைத்ததால் சர்ச்சை

சி.பி.எஸ்.இ., புத்தகங்களுக்கு ஹிந்தி பெயர் வைத்ததால் சர்ச்சை

சென்னை: இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்காக, என்.சி.இ.ஆர்.டி., நிறுவனம் வெளியிடும் ஆங்கிலவழி பாடப்புத்தகங்களுக்கு, ஹிந்தி பெயர்கள் வைக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், இரண்டாண்டுகளாக புதிய புத்தகங்களை வடிவமைத்து வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு, 4, 5, 7, 8ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை தயாரித்து வருகிறது. அதில், ஆங்கிலவழி பாடப்புத்தகங்களின் தலைப்புகள், ஹிந்தியில் வைக்கப்பட்டு உள்ளன.இது, ஹிந்தி பேசாத மாநில குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சி என்று, குற்றம் சாட்டப்படுகிறது. அதாவது, 1, 2, 3ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு, இந்திய இசைக் கருவிகளான மிருதங், சந்துார், பூர்வி என்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன; 7, 8ம் வகுப்பு ஆங்கில புத்தகங்களுக்கு, ஹிந்தி தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், 1, 2, 3, 7, 8ம் வகுப்பு புத்தகங்களுக்கு, 'ரோமன்' எண்கள் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, அவை ஹிந்தி எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன.அதேபோல, ஆங்கிலவழி கணித பாடப்புத்தகத்துக்கு, 'மேத்தமேடிக்ஸ்' என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, 'கணித பிரகாஷ்' என, மாற்றப்பட்டுள்ளது. அறிவியல் பாடப்புத்தகம் 'சயின்ஸ்' என்றிருந்த நிலையில், 'கியூரியாசிட்டி' என்று மாறியுள்ளது. அதேபோல, சமூக அறிவியல் பாடம், 'சோஷியல் சயின்ஸ்' என்றிருந்தது. தற்போது, 'இந்தியா அண்டு பியான்' என, மாறியுள்ளது.இது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, கேரள பொதுக்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் வி.சிவன்குட்டி, 'தேசிய பாடத்திட்டத்தில் படிக்கும் குழந்தைகளின் ஆங்கிலவழி பாடங்களுக்கும், புத்தகங்களுக்கும் ஹிந்தியில் பெயரிடுவது, நாட்டின் பன்மொழி தன்மைக்கு கேடு விளைவிக்கும் செயல்' என்று, தெரிவித்துள்ளார்.அதேபோல, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., வெங்கடேசன், 'ஆங்கிலவழி பாடநுால்களின் தலைப்புகளுக்கு ஹிந்தி; ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் ஹிந்தி; என்.சி.இ.ஆர்.டி., முதல் எம்.பி.,க்களுக்கான பதில் வரை எல்லாவற்றிலும் ஹிந்தி திணிப்பு' என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ES
ஏப் 16, 2025 22:51

They won't comment about this hindi push a disgrace. Absolute hypocrites will defend this too


S.Martin Manoj
ஏப் 16, 2025 17:34

கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்,


ஆரூர் ரங்
ஏப் 16, 2025 09:33

CURIOSITY, INDIA AND BEYOND என்பதெல்லாம் எப்போ ஹிந்தி வார்த்தைகளாயின? குறிபிட்ட எந்தப் புத்தகத்தின் பெயரும் ஹிந்தியில் அல்லது ஹிந்தி எழுத்தில் இல்லை. எல்லாம் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேவநாகரி எழுத்துக்கள். அமைச்சர்கள் உட்பட முக்கால்வாசி தமிழர்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில்தான் உள்ளன. மொழி வெறுப்பு அரசியல் ஆபத்தானதாகும்.


Oviya Vijay
ஏப் 16, 2025 10:16

மொழி வெறுப்பு அரசியல் ஆபத்து என்று சொல்லத் தெரிந்த உங்கள் மனதிற்கு சங்கிகள் காட்டும் மத வெறுப்பு இந்த சமூகத்துக்கு ஆபத்து என்பதை மட்டும் ஏன் உணர மறுக்கிறது... இவ்வுலகில் பிறந்த மனிதர்களுக்குள் மதத்தின் பெயரால் எந்த வேறுபாடுகளும் பார்த்து வெறுப்புணர்வு வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை...


Padmasridharan
ஏப் 16, 2025 09:06

ஆங்கில கதைகளில் ஹிந்தி பெயரிட்ட கதாபாத்திரங்கள், பண்டிகைகளின் பெயர்கள் முன்பு தொட்டு வருகிறதே .. அதை எப்ப கவனிப்பாங்க இவங்க எல்லாம்


Anantharaman
ஏப் 16, 2025 08:24

இந்த நிலை தொடர்ந்து அவசரச் சட்டம் மட்டுமே நாட்டில் சீர் நிலை ஏற்படும்.


அப்பாவி
ஏப் 16, 2025 07:23

ஒரே நேஷன். ஒரே பாஷன். ஒரே கோஷன்.நாடே நாசன்.


Oviya Vijay
ஏப் 16, 2025 07:41

அருமை அப்பாவி... உங்கள் கருத்து மிகவும் அருமை...


Oviya Vijay
ஏப் 16, 2025 07:13

அப்போ இது திணிப்பு இல்லீங்களா சாமி??? உண்மையா தான ஹிந்தியில பெயர் வெச்சு இருக்காங்க... எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டானுவ... இப்படி ஒரு எதிர்ப்பு வரும்னு தெரியாம பெயர் வெச்ச அந்த அறிவு கெட்ட மாங்கா மடையன் யாரோ... ஹிந்தி திணிப்பு எதிர்ப்பில் இந்தியாவிலுள்ள மற்ற பிற மாநிலங்கள் எதிர்காலத்தில் தமிழகத்தை முன்னோடியாக எடுத்துக் கொள்ளப் போகின்றது... அதற்குள் அந்தந்த மாநில மொழிகளை ஹிந்தி என்ற ஒற்றை மொழி கபளீகரம் செய்திருக்கும்... பட்ட பின்பு புத்தி வந்து பின் தெளிந்து போராடுவர்... தமிழகத்தில் வரும் முன் காப்போம் என்பது தான்... தொடர்ந்து ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம்...


venugopal s
ஏப் 16, 2025 06:11

ஹிந்தி திணிப்பு என்று சொல்லாதீர்கள்,நமது சங்கிகளுக்கு எல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வந்து விடும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை