உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்: சி.பி.ஐ, விசாரணை அவசியம்: பா.ஜ.,

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்: சி.பி.ஐ, விசாரணை அவசியம்: பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் நடந்துள்ள ஊழலை விசாரிக்க, சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளிப்பாரா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒப்புதல் அளிப்பாரா?

அவரது அறிக்கை:மத்திய அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில், 100 நாள் வேலை திட்டத்திற்காக, தமிழக வரலாற்றிலேயே, அதிகபட்சமாக 39,339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளில் தி.மு.க., சிக்கி உள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழலை விசாரிக்க, சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளிப்பாரா?இந்த ஊழலின் அளவை பொதுமக்கள் புரிந்து கொள்ள, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மட்டும் சுட்டிக்காட்டி இருக்கிறோம். தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக கிராமப்புற மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், தமிழகத்தை விட குறைவான நிதியை பெற்றுள்ளன. இது முதல்வருக்கு தெரியுமா?

ஊழல் கட்சி

நுாறு நாள் வேலை திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 நாட்களாக உயர்த்துவதாக முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதை எப்போது நிறைவேற்றப் போகிறார். கடின உழைப்பாளிகளான, தமிழக மக்களுக்கு சேர வேண்டிய நிதியை கொள்ளை அடித்துள்ள தி.மு.க., வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; மோசடியான, இரக்கமற்ற பிரிவினையை துாண்டும் கட்சி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMESH
மார் 31, 2025 13:07

நாட்டின் சாபக்கேடு


अप्पावी
மார் 31, 2025 09:11

சி.பி.ஐ விசாரணையா? 100 நாள் திட்டத்தை நூற்றாண்டு திட்டமா 100 வருஷம் தொப்பை வளர்த்து விசாரிச்சு போதிய ஆதாரம் இல்லைன்னு எல்லோரையும் விடுதலை செஞ்சுருவாங்களேடா...


vijai hindu
மார் 31, 2025 08:09

ஸ்டாலின் என்ன ஒப்புதல் அளிக்கிறது நேர களத்தில் இறங்க வேண்டியது தான் யாருன்னா சொந்த காசுல சூனியம் வைத்துக் கொள்வாங்களா பிராடு திட்டம் அரசியல்வாதிகள் ஆட்கள் வேலை செய்கிறார்கள் கணக்காட்டி கொள்ளையடிக்கிறாங்க இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தனும்


மாரண்
மார் 31, 2025 04:49

திட்டமே ஆகாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை