உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத்திய அமைச்சர் மீது அவதூறு: மின்னல் வேகத்தில் செயல்பட்டது போலீஸ்!

மத்திய அமைச்சர் மீது அவதூறு: மின்னல் வேகத்தில் செயல்பட்டது போலீஸ்!

சென்னை: விபத்து வழக்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் கைதாகி இருக்கும் தகவலை தெரிவிக்க, அரசும், காவல் துறையும் காட்டிய மின்னல் வேகத்தை, மற்ற வழக்குகளிலும் காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி, 39, அவரது மனைவி மீனா, 31 ஆகியோர், சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில், விழுப்புரம் மேல்மலையனுார் கோவிலுக்குச் சென்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் டோல்கேட் அருகே சென்றபோது, விபத்தில் சிக்கினர். இதில், நாராயணசாமி பலியானார்; மீனா சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்தை ஏற்படுத்திய, சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர் அரவிந்த், 32, கைதாகி உள்ளார். அவர் கைதாகி இருக்கும் தகவலை தெரிவிக்க, அரசும், காவல் துறையும் மின்னல் வேகத்தில் செயல்பட்டன.இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார், செய்தியாளர்களின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு, விபத்தை ஏற்படுத்திய ஆடி கார், அதன் வாகன பதிவு எண்கள் உள்ளிட்ட விபரங்களை, அறிக்கையாக அனுப்பினர்.அந்த அறிக்கையின் கீழ் பகுதியில், சட்டென தெரியும்படி குறிப்பு என தெரிவித்து, 'காரை ஓட்டி வந்த நபரின் அம்மாவின் சித்தி மகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்' என, அடையாளப்படுத்தி இருந்தனர்.இந்த தகவலை, செய்தியாளர்களின் மொபைல் போன் எண்களுக்கு தொடர்பு கொண்டும் தெரிவித்தனர்.விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்தபோது, அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் துாரத்து உறவினர் என்பதை தெரிவிக்கவில்லை; அவரிடம் சிபாரிசு பெறவும் முயற்சி செய்யவில்லை.ஆனால், அரவிந்த் மத்திய நிதியமைச்சரின் உறவினர் தான் என்பதை தெரிவிக்க, அரசும், காவல் துறையும் காட்டிய வேகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதே வேகத்தை, மற்ற வழக்குகளிலும் காட்டுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

naranam
மார் 13, 2025 22:41

இதுக்கெல்லாம் பயப்படுகிற ஆள் கிடையாது மத்திய நிதி அமைச்சர். திமுகவுக்கு அவர் கொடுக்கிற மரண அடி தொடரும்.


ManiK
மார் 13, 2025 21:41

படு கேவலமாக இல்லையா போலிஸ் அமைச்சருக்கும் அவர் பையன் போலி அமைச்சருக்கும்?!


தேவராஜன்
மார் 13, 2025 19:02

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து விடலாமா?


naranam
மார் 13, 2025 18:29

அந்த அம்மா நாடாளுமன்றத்தில் அடிக்கிற அடி தாங்க முடியாமல் திணறும் திமுக மத்திய நிதி அமைச்சருக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் உள்ள தீயமுகவின் கீழ்த்தரமான செயல் போலத் தான் இது தெரிகிறது.


நசி
மார் 13, 2025 17:41

குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக கண் மூடிதனமாக காவல் துறை நீதி துறை அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறது உதாரணம் சிதம்பரம் தீட்சிதர்கள் இந்து சமய வழக்கங்கள் திரு ரங்க ராஜ நரசிம்மனை சித்ரவதை செய்வது நீதி தேவதை கண் மூடியே உள்ளது


vbs manian
மார் 13, 2025 14:56

மலிவான பபி ளிசிட்டி.


மாசற்றவன்
மார் 13, 2025 14:38

முக்கியமாக யார் அந்த சார் என்பதில் காண்பித்திருக்க வேண்டும்


தமிழ்
மார் 13, 2025 13:24

மேடம் பார்லிமென்ட்டில் திராவிடத்தை தோலுரிக்கிறார். அதற்கு பதில் இல்லை. திருப்பி தோலுரிக்க விசயம் இல்லை, அப்பா வீட்டு சொத்தா? பட்ஜெட்டில் தநா பேர் இல்லை, இதை தவிர. ஆஹா கிடைச்சுதுரா ஒரு விசயம். சாலை விபத்தை அரசியலாக்கு. தயவு செய்து திமுகாவில் உள்ள விசயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இதை அரசியல் ஆக்கினால் திமுக பேர் தான் கெடும் என்று உணர்த்துங்கள்


கிஜன்
மார் 13, 2025 10:34

வண்டி ஏற்றி ...ஒரு அப்பாவியின் உயிரை எடுத்திருக்கிறார் .... அதை கண்டிக்காமல் ... போலீசாரை குறை கூறுகிறீர்களே .... இதுதான் உங்கள் நியாயமா ?


Rajathi Rajan
மார் 13, 2025 11:16

நியாயம் இது தான் .......


Sridhar
மார் 13, 2025 14:08

அது விபத்து யா. ஆனா போலீஸ் செய்யுறது அநாகரீக அல்லது திராவிட அரசியல்.


Padmasridharan
மார் 13, 2025 10:25

ஏன் வேகம் காட்டமாட்டார்கள் கடற்கரைக்கு வருபவர்களை மிரட்டி, அடித்து, பணம் வாங்குவதும், அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லைகள் கொடுப்பதும் நடக்கிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை