வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதிமுகவை உப்புமா கட்சி ஆக்காம்மல் இருந்தால் சரி ...
இதெல்லாம் ஒரு செய்தி என்று போடுகிறீர்களே....
உப்புமா கொடுத்ததற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால் அடுத்து அமித்ஷா அதிமுகவினருக்கு அல்வா கொடுக்கும் போது என்ன சொல்வார்களோ?
புதுடில்லி: சமீபத்தில், தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி டில்லி வந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இவருடன், வேலுமணி உட்பட சீனியர் தலைவர்களும் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து, அரசியல் தொடர்பான பல விஷயங்கள் ஏற்கனவே ஊடகங்களில் வந்துவிட்டன; ஆனால், சுவாரஸ்யமான செய்தி ஒன்று வெளியாகவில்லை.இந்த சந்திப்பின்போது, அ.தி.மு.க., தலைவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார் அமித் ஷா. 'போஹா' என கூறப்படும் அவல் உப்புமா தான், அமித் ஷா வீட்டில் அ.தி.மு.க.,வினருக்கு வழங்கப்பட்டது. வடமாநிலங்களில் அதிகமாக இந்த அவல் உப்புமா தான் சிற்றுண்டியாக சாப்பிடுகின்றனர். எண்ணெயில் வறுத்த வேர்க்கடலையைப் போட்டு, இது தயாரிக்கப்படுகிறது. குஜராத்திகளின் வீடுகளில், காலை டிபனும் இதுதான்.'நன்றாக இருக்கிறது' என பாராட்டியவுடன், இரண்டாவது முறையாக, 'போஹா' கொடுக்கப்பட்டதாம். இதைஅடுத்து டீ கொண்டு வரப்பட்டது. உடனே அமித் ஷா, 'டீ வேண்டாம்; சவுத் இண்டியன் காபி கொடுங்கள்' என, கூறினாராம்.அமித் ஷாவிற்கும், பழனிசாமி குழுவிற்கும் இடையே அரசியல் பேச்சு வார்த்தை எப்படி இருந்ததோ தெரிய வில்லை. ஆனால், அமித் ஷாவின் உபசரிப்பில் மகிழ்ச்சி அடைந்தனராம் அ.தி.மு.க., தலைவர்கள்.
அதிமுகவை உப்புமா கட்சி ஆக்காம்மல் இருந்தால் சரி ...
இதெல்லாம் ஒரு செய்தி என்று போடுகிறீர்களே....
உப்புமா கொடுத்ததற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால் அடுத்து அமித்ஷா அதிமுகவினருக்கு அல்வா கொடுக்கும் போது என்ன சொல்வார்களோ?