உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: புதிய மாற்றத்தின் பின்னணி!

டில்லி உஷ்ஷ்ஷ்: புதிய மாற்றத்தின் பின்னணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சமீபத்தில் வங்கிகள் தொடர்பான சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. ராஜ்யசபா ஒப்புதல் கொடுத்த பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்; அவர் ஒப்புதல் அளித்த உடன், இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும். 'இந்த புதிய சட்ட திருத்தத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது; அது உண்மை கதை' என்கின்றனர் மூத்த அதிகாரிகள்.ஒவ்வொரு தீபாவளியின்போதும், நாட்டின் எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து, அவர்களோடு தீபாவளி கொண்டாடுவது பிரதமர் மோடியின் வழக்கம்.இப்படி ஒரு முறை சென்றபோது, ஒரு ராணுவ வீரர் மோடியிடம்,- 'என் அப்பாவும் ராணுவத்தில் இருந்தார். அவர் பணியில் இருந்தபோது, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவருடைய வங்கி கணக்கில் 40 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணம் அனைத்தும் என் அம்மாவிற்கு சென்றுவிட்டது; மகன், மகள்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை' என்று கூறி வருத்தப்பட்டாராம்.இதையடுத்து, டில்லி திரும்பிய மோடி, நிதி அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் இந்த விஷயத்தைக் கூறி, 'இதற்கு தீர்வு காண வேண்டும்' என கேட்டுக் கொண்டாராம்.வங்கி கணக்கை ஒருவர் துவங்கும்போது, அவர் இறந்த பின், இந்த பணம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை, 'நாமினேஷன்' வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.பலர், இந்த நாமினேஷன் செய்யாமல் இருப்பதால், அவர்கள் இறந்த பின், அவர்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம், எவருக்கும் கிடைக்காமல் அப்படியே இருக்கும். இப்படி, ரிசர்வ் வங்கி கணக்கில், 72,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாம்.கஷ்டப்பட்டு ஒருவர் சேர்த்த பணம், எவருக்கும் கிடைக்காமல் ரிசர்வ் வங்கியிடம் இருப்பது, ஒவ்வொரு ஆண்டும் 26 சதவீதம் உயர்ந்தபடியே போகிறதாம்.புதிய சட்ட திருத்தத்தின்படி, ஒருவர் நான்கு பேரை நாமினியாக நியமிக்கலாம்; இதற்கு முன், ஒருவரைத் தான் நியமிக்க முடியும். அத்துடன், ஒவ்வொரு நாமினிக்கும், எத்தனை சதவீதம் பணம் தர வேண்டும் என்பதையும், நாமினேஷன் செய்யும்போது தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

குமரன்
டிச 08, 2024 07:06

திரு மோடிஜி மாற்றத்திற்கான பிரதமர் மட்டுமல்ல மக்களுக்கான பிரதமர்


சூரியா
டிச 08, 2024 06:11

சட்டப்படி, நாமினேஷன் என்பது, வாரிசுதார ர் என்பதல்ல. உண்மையான வாரிசுதாரின் பாதுகாவலர் என்ற அளவே. ஆகவே, ஒன்றை நான்கு ஆக்கியதால் எந்தச் சட்டத்தீர்வும் கிடைக்காது.


ஆரூர் ரங்
டிச 08, 2024 14:12

கோர்ட்டு க்குப் போய் தீர்ப்பு வாங்கி உரிய பங்கு கிடைக்க ஒரு தலைமுறை ஆகும். ஆனால் நாமினி என்றால் நிதி நிறுவனத்திடமிருந்து உடனடியாக பணம் கிடைக்கும். பங்கு பிரிப்பதில் பிரச்சினைகள் வந்தால் பின்னர் கவனிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை