உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 16 பதக்கங்கள் வென்றும் பலன் இல்லை.. வாழ்த்து கூட சொல்லாத தமிழக அரசு

16 பதக்கங்கள் வென்றும் பலன் இல்லை.. வாழ்த்து கூட சொல்லாத தமிழக அரசு

சென்னை : ''மலேசியாவில் நடந்த ஆசிய பசிபிக் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றபோதிலும் எங்களுக்கு தமிழக அரசு வாழ்த்து கூட சொல்லவில்லை,'' என காது கேளாதோர் பிரிவு விளையாட்டு வீரர், வீராங்கனையர் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மலேசியாவில் நடந்தன. 21 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியா முதலிடம் பெற்றது.அதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள், முதன் முதலாக, ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்கள் வென்றனர். சென்னை, கன்னியாகுமரி, கடலுார், சேலம், ஈரோடு, திருச்சி, தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரியங்கா, சுபஸ்ரீ, ஹரிணி, சமீஹா பர்வின், மணிகண்டன், ராக்கப்பன், வினித், சுதன், கார்த்திக், சாந்தனு ரவி, யாஷின் என 11 பேர் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

சென்னையில் நேற்று அவர்கள் அளித்த பேட்டி:

நாட்டிற்கும், தமிழகத்திற்கும் விளையாடி பதக்கம் வென்று பெருமை சேர்த்த எங்களுக்கு, தமிழக அரசு வாழ்த்து கூட சொல்லவில்லை என்பது வேதனையாக உள்ளது. காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருந்தும், தேசிய, உலக அளவில் பல சாதனைகள் செய்து வரும் எங்களை அரசு புறக்கணித்து வருகிறது. தேசிய அளவில் வெற்றி பெறும் சக வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை கூட எங்களுக்கு வழங்காதது ஏன்.2021 முதல் உலக போட்டி, காது கேளாதோருக்கான, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறோம். தற்போது பதக்கம் வென்று இருக்கிறோம்; அதற்கான பலனும் இல்லை. எங்கள் தாய், தந்தையின் கூலித்தொழில் வருமானத்தில் தான் நாங்கள் இந்த நிலைக்கு வந்துள்ளோம். நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள். பல முறை விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தான் எங்கள் எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறியதாவது:

விளையாட்டு வீரர்கள் வெளிநாடு செல்வதற்கான செலவு தொகையை தமிழக அரசு தான் வழங்கியது. அவர்கள் வெற்றி பெற்று தமிழகம் திரும்பி இருந்தாலும் இன்னும் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. அவை கிடைத்ததும் அவர்களுக்கான உயரிய ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும். இதுவரை அவர்கள் யாரும் எங்களை வந்து சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சிந்தனை
ஜன 29, 2025 23:51

சாராயம் குடிக்கும் போட்டியில் முதலிடம் வந்தால் தமிழகத்தில் உயர்ந்த பரிசுகள் கிடைக்கும்


ram
ஜன 29, 2025 18:14

அவங்களுக்கு அதிக வேலைபளு... எங்கே எதை ஆட்டையப் போடலாம் என்ற எண்ணமே பிறதான வேலை அவங்களுக்கு.. இதுலே எங்க உங்களை பார்க்க நேரம் இருக்கப்போகுது... அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க சகோதரி சகோதரர்களே... வாழ்த்துக்கள் மக்களே...


ராமகிருஷ்ணன்
ஜன 29, 2025 17:47

உதைநிதிக்கு ஏகப்பட்ட வேலைகள்,


Rajasekar Jayaraman
ஜன 29, 2025 12:28

ஒன்றும் இல்லை எங்கள் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு உதயநிதியை நினைத்தோம் அவ்வளவுதான் எங்களுக்கு ஆட்டம் ஈசியாக உணர்ந்து வெற்றி பெற்றோம் என்று அறிக்கை விடுங்கள் போதும் எல்லாம் தானே நடக்கும்.


Rangarajan Cv
ஜன 29, 2025 10:57

Forget about the govt. Our wishes! are with you. God bless you all.


lana
ஜன 29, 2025 09:08

உங்கள் வெற்றிக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள்


Nandakumar Naidu.
ஜன 29, 2025 07:50

வாழ்த்துக்கள் செல்வங்களே.


அப்பாவி
ஜன 29, 2025 06:48

ஜீ கூடவா வாழ்த்து சொல்லலை?


V வைகுண்டேஸ்வரன், chennai
ஜன 29, 2025 08:35

அவரு எதோ டெங்கு மலேரியா ஒழிக்க போய் விட்டாரு ...மூடு உன் வாய


Seekayyes
ஜன 29, 2025 06:35

எங்கள் விளையாட்டு துறை அமைச்சர் எங்கே? அவர் வெறும் formula கார் ரேஸ்தான் ஊக்குவிப்பாரா?


SANKAR
ஜன 29, 2025 10:43

he paid for foreign travel and stay


புதிய வீடியோ