உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சம்பளம் வழங்காமல் பல்கலை ஆசிரியர்களின் வயிற்றில், தி.மு.க., அரசு அடிப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், உயர்கல்வித் துறையின் நிர்வாக திறமையின்மையால் பல்கலைகளும், அரசு கல்லுாரிகளும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன. பல பல்கலைகளில் துணைவேந்தர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. பேராசிரியர்களுக்கு ஊதியமின்மை, பணி நிரந்தரமின்மை, நிதிப் பற்றாக்குறை, முறைகேடுகள், மாணவர் சேர்க்கை குறைவு போன்ற முக்கிய பிரச்னைகளால், தமிழக உயர்கல்வித் துறை சீரழிந்துள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.தேவையற்ற வழக்குகளுக்கு, உச்ச நீதிமன்றம் சென்று, இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் தி.மு.க., அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்குகளை ஏன் முடிக்கவில்லை என்று, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிதிப் பற்றாக்குறையால் மதுரை காமராஜர் பல்கலையில், 2 ஆண்டுகளாக சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலை, அண்ணாமலை பல்கலையில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள், ஊதியப் பிரச்னைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. சென்னை பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு, கடந்த மாதச் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. பாரதிதாசன், பாரதியார் பல்கலைகளில் முனைவர் பட்டம் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாக, ஆய்வாளர்கள் புகார் அளித்துள்ளனர். 160 அரசு கல்லுாரிகளில், 8000க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களுக்கு அழியாத கல்விச் செல்வத்தை கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் எனும் ஆசான்கள். அந்த தெய்வங்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில், தி.மு.க., அரசு இறங்கியுள்ளது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல். தன்னலமில்லாமல் அறிவை அள்ளி வழங்கும் ஆசிரியர்களின் எரியும் வயிறு, இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்காமல் விடாது என்று எச்சரிக்கிறேன இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

புல் அவுட்:

நம்பத் தயாராக இல்லை!தமிழக பல்கலைகளில் நிர்வாகப் பிரச்னைகளால், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் பல பாடப்பிரிவுகளையே, தி.மு.க., அரசு மூடிக்கொண்டிருக்கிறது. நான்காண்டுகளாக துாங்கிவிட்டு, இப்போது புதிய பல்கலை, கல்லுாரிகள் திறக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை, தமிழக மக்களும், மாணவர் சமுதாயமும் நம்பத் தயாராக இல்லை. உயர்கல்வி நிலை இப்படி இருக்கும்போது, 'நான் முதல்வன், தமிழ் புதல்வன்' என்று வெற்று விளம்பரம் செய்வதால் மட்டும், மாணவர்களின் கல்வி மேம்படாது.பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 06, 2025 09:04

ஆசிரியர்கள் எப்போதும் கழக அரசுக்குத்தான் வாக்களிப்பார்கள் ... எனவே குறிபார்த்து அவர்கள் வயிற்றில் அடிக்கிறர்கள் ..கோவில் அர்ச்சகர் வயிற்றில் அடிக்கிறார்கள் ..இதற்கெல்லாம் விடிவுகாலம் வரும்


c.k.sundar rao
ஜூன் 04, 2025 11:04

People of the state should realise the ground reality about the financial mess d by present party in the govt and vote it out in the next elections which is due next year.


Kanns
ஜூன் 04, 2025 09:09

Supreme People Want to Abolish All Govt Posts With OverFattened Salary for Useless Outputs Maxm 25%. Fill All Govt Posts Only on Reasonable Minm Wages Fixed Only by PeoplesRepCommittees


vivek
ஜூன் 04, 2025 14:50

kanns contact good hospital immediately


V RAMASWAMY
ஜூன் 04, 2025 08:18

ஆசிரியர்கள் மட்டுமல்ல, பல கோயில்களில் வயதான அர்ச்சகர்களைக் கொடுமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நாங்கள் சென்ற ஒரு பிரசித்தமான கோயிலில் அர்ச்சருக்கு உதவியர்களை நீக்கிவிட்டார்கள். வயதான அவரே கனமான தண்ணீர் குடங்களை தூக்கிக்கொண்டு குனிந்து நிமிர்ந்து அபிஷேகம், அர்ச்சனை செய்து தெய்வ கார்யம் செய்துகொண்டிருக்கிறார், பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாகயிருக்கிறது. அதர்மம் நெடு நாட்கள் தாங்காது. கண்டிப்பாக தெய்வம் நின்று கொல்லும்.


Padmasridharan
ஜூன் 04, 2025 08:10

கண்டிப்பாக கொடுக்கப்படும் தேர்தலுக்கு முன்னர் அதிகமாக வயிறை குளிரச்செய்யும். . கல்வி மட்டுமே செல்வமில்லை, படித்ததற்கு ஏற்ற வேலை கிடைத்தால் மட்டுமே அது சாலச்சிறந்தது. Employment Office ல Registration & Renewal க்கு போனா data காணவில்லை என்று சொல்லி மரியாதையுடன் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள். அங்கு நடக்கும் ஊழல் எப்ப வெளியில வரும்


சாமானியன்
ஜூன் 04, 2025 07:36

திமுக அரசு தடுமாறுகிறது. ஆலோசகர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. கூட்டணிக்கட்சிகளும் மௌணம் புரியவில்லை ! திமுக அரசாங்கத்தின் ப்ரியாரிட்டி என்னவென்று ? எடப்பாடியார் மனம் நொந்து உண்மை பேசுகிறார். நிதி பற்றாக்குறை ஒருமாய வார்த்தையா ? இது போன்ற திறமையற்ற அரசை இதுவரை பார்த்ததில்லை. பொது வெளியில் அத்தனை புளுகு புளுகுகிறார். பத்திரிக்கைகள் கீ கொடுத்த பொம்மைகள்.


முக்கிய வீடியோ