உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மாணவர் அணி தீர்மானம்

200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மாணவர் அணி தீர்மானம்

சென்னை: 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்' என, தி.மு.க., மாணவர் அணி சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=51cqjq8q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழகத்தின் கல்வி உரிமையை மீட்க, சட்டப் போராட்டம் நடத்தும் முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்கப்படும் என, அறிவித்த முதல்வருக்கு நன்றி.கல்வி உரிமை சட்டத்துக்கான நிதியை உடனே ஒதுக்கக்கோரி, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கீழடி அகழாய்வு அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. வரும் சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட, '200 தொகுதிகளில் வெற்றி' என்ற, முதல்வர் ஸ்டாலின் முழக்கத்தை நிறைவேற்றுவோம்.இவ்வாறு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

A P
மே 27, 2025 21:17

" மாணவர்" என்ற சொல்லை தமிழ்நாட்டில் கேட்டாலே, தண்ணி அடிக்கிறவனா, கஞ்சா அடிப்பவனா, வாத்தியாரை அடிப்பவனா, கூடப் படிக்கிற நல்ல மாணவனைக் கொல்பவனா, தமிழில் fail ஆகிறவனா, திருட்டுக் கட்சியைச் சார்ந்தவனா, NEET ஒழிக்கப்படும் என்ற முயல்கொம்பு செய்தியை நம்பிக் கொண்டிருப்பவனா, ஒருதலையாய் காதலித்த பெண்ணைக் கொலை செய்தவனா, சக மாணவியைக் கற்பழித்தவனா, ரோடில், எல்லா மக்களையும் பயமுறுத்தும்படி, 100 கி.மீ. வேகத்தில் கன்னா,பின்னா என்று வண்டி ஓட்டுபவனா,என்றெல்லாம் கற்பனை ஓடுகிறதே அன்றி, நல்ல மாணவர்கள் கண்ணில் படுவது மிகவும் துர்பலமாக உள்ளது. மாணவர் அணி என்ற உடனேயே “ ஆஹா, ரொம்ப நல்லவர்கள் ஐயா “ என்று சொல்லத் தோணலையே. என்ன செய்வது வளர்ப்பு அப்படி.


ManiK
மே 27, 2025 18:48

பாஸ் ஆகாத மாணவர் அணினு சொல்லுங்க. எல்லாம் மாணவர்கள் என்னும் பெயரில் அலையும் வெவரமாணவர்கள்... ஊழல் செய்வதில்.


போலி அரசியல்
மே 27, 2025 17:35

ஒகேப்பா அப்ப உடனே கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் வங்கிடுங்க. கிடைக்கேலேனா, கோர்ட்டுக்கு போங்க சுனங்காமல் விழா எடுத்து கொண்டாடுங்கள்.


Haja Kuthubdeen
மே 27, 2025 10:35

சூப்பர்...இதே போல காங்கிரசும் தனியாக திமுக எம் எல் ஏக்களின் செயல்பாடு ..அதிருப்தி..வெற்றி பெற முடியுமா என்பதை தனியா கருத்து எடுக்கலாம்.


Rajasekar Jayaraman
மே 27, 2025 10:17

234 தொகுதியிலும் போட்டியிட்டு டெபாசிட் இழக்கவேண்டும்.


எஸ் எஸ்
மே 27, 2025 10:17

தீர்மானம் செய்ய வேண்டியது மக்கள்


RAAJ68
மே 27, 2025 07:03

டாஸ்மாக்கில் ஊழல் செய்து 49 ஆயிரம் கோடியை அள்ளிய மேலிடத்தில் இருந்து அதை மீட்டு அரசு கஜானாவில் செலுத்துவோம் என்று உறுதி எடுத்துக் கொள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை