உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க., நிறைவேற்றாத வாக்குறுதிகள்: மாநாட்டில் பட்டியலிட்ட மார்க்சிஸ்ட்

 தி.மு.க., நிறைவேற்றாத வாக்குறுதிகள்: மாநாட்டில் பட்டியலிட்ட மார்க்சிஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாதவை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பட்டியலிடப்பட்டது. கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்துக்கான பொதுவான அறிவிப்புகள் மட்டுமின்றி, தர்மபுரி மாவட்டத்துக்கென, 44 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. தற்போது, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, 3 மாதங்களே உள்ள நிலையில், பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=79qeyn92&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தர்மபுரியில் இருந்து அரூர் வழியாக மொரப்பூருக்கு, நான்கு வழிச்சாலை திட்டம் போன்ற ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றபட்டுள்ளன. அதேநேரத்தில், 'தர்மபுரியில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம் மற்றும் நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைக்கப்படும். செனாக்கல் நீர்ப்பாசன திட்டம், ஒகேனக்கல் உபரி நீரை, மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நிரப்பி பாசன வசதி, செனாக்கல் தடுப்பணை, அரூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். 'தீர்த்தகிரீஸ்வரர் கோவில் சுற்றுலா தலமாக்கப்படும். பென்னாகரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம், பாப்பாரப்பட்டி வேளாண் பயிற்சி பள்ளியை வேளாண் கல்லுாரியாக தரம் உயர்த்துதல், தர்மபுரியில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, அனைத்து மலைக்கிராமங்களுக்கும் சாலை வசதி' போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக, பென்னாகரம் மற்றும் அரூரில் மாநாடு நடைபெற்றது. அதில், கடந்த தேர்தலின்போது, தி.மு.க., சார்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில், இன்னும் நிறைவேற்றாமல் இருப்பவை குறித்து பட்டியலிடப்பட்டன. மாநாட்டில் பங்கேற்ற, மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேசுகையில், ''மா.கம்யூ., எப்போதும் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் கட்சி. அரூர் பகுதியில் பல்வேறு திட்டங்கள் வருவதற்கு, மா.கம்யூ., நடத்திய போராட்டங்களே காரணம்,” என்றார். மாவட்ட செயலாளர் சிசுபாலன் பேசுகையில், ''கடந்த தேர்தலின்போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற வலியுறுத்துகிறோம். கூட்டணியில் இருந்தாலும், அ.தி.மு.க.,வை விட, மா.கம்யூ., கட்சி தான் மக்கள் பிரச்னைக்காக போராட்டங்களை நடத்துகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M Pooragavan
ஜன 03, 2026 07:54

மக்களின் மூளையை சலவை செய்யவே


M Pooragavan
ஜன 03, 2026 07:51

கம்யூனிஸ்ட்கள் என்றால் கம்யூனிசம் என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை. சோம்னாத் சட்டர்ஜி, ஹர்கிசன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு, தமிழகத்தில் பாண்டியன், வரதராஜன், சௌந்தர்ராஜன் இன்னும் சிலர் அரசின் குறைகளை யோசிக்காமல் குறை கூறினார். இப்போது உள்ளவர்கள் ஜால்ரா மட்டுமே அடிக்கின்றனர். இப்போது கேரளாவில் மட்டுமே கம்யூனிசம் உள்ளது.


M Pooragavan
ஜன 03, 2026 07:41

2021 ல் செய்யாததை 2026 ல் மீண்டும் வாக்களியுங்கள் நிச்சயம் செய்து விடுவார்கள் என்று வாக்கு சேகரிக்க வந்த இவர்கள் 4 ஆண்டுகளாக என்ன? செய்தார்கள்... இப்போதைய கம்யூனிஸ்ட் என்பது ஜால்ரா...


Gajageswari
ஜன 03, 2026 05:23

நல்ல விரிவான ஆவணம். தேர்தல் சிலருக்கு கொஞ்சம் சேர்த்து போட்டு கொடுங்கள்


Lakshminarayanan Subramanian
ஜன 02, 2026 19:09

நடுவண் அரசு பணம் தருவதற்கு அண்ணாமலை ஏற்பாடு பண்ணாம இருக்காருல்ல அப்புறம் எப்படிங்க


Lakshminarayanan Subramanian
ஜன 02, 2026 19:06

99.1234 %வாக்குறுதி நிறைவேற்றியாச்சுன்னு சொன்னாகளே பாக்கியுள்ள. ...8766 அதைச்சொல்லுதீகளா நீங்கதான் அந்தக் கொம்பனா ஏன்னா எந்தக் கொம்பனும் குறைசொல்லமுடியாத ஆச்சின்னாகளே நம்ம அப்பா


Raj
ஜன 02, 2026 18:09

பச்சோந்தியின் வம்சம் தான் இவர் அது வேற வாய், இது நாற வாய். ....... இது கடைசி காலத்தில் சொல்லக்கூடாது, 2021 லே சொல்லி ஆர்ப்பாட்டம் செய்திருக்கவேண்டும், திராணி இல்லாத மா. கம்யூ.


வீரபாண்டி
ஜன 02, 2026 16:45

நீங்கள் அத்தனை பேரும் கூட்டு களவாணிகள்.


பாலாஜி.
ஜன 02, 2026 13:11

பத்து ஆண்டுகளாக பாஜக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிடு.


vivek
ஜன 02, 2026 15:11

அறிவிலி பாலாஜி... மார்க்சிஸ்ட் திமுகவின் கூட்டணி கட்சி...கொஞ்சம் அடக்கி வாசி


lana
ஜன 02, 2026 12:02

வடிவேல் ஒரு தீர்க்க தரிசி.


முக்கிய வீடியோ