உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சரஸ்வதி நதி இருந்ததற்கான ஆதாரம்: ராஜஸ்தான் அகழாய்வில் கண்டுபிடிப்பு

சரஸ்வதி நதி இருந்ததற்கான ஆதாரம்: ராஜஸ்தான் அகழாய்வில் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த அகழாய்வு பணியில், 4,500 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தின் அடையாளமாக, முக்கிய ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள பஹாஜ் கிராமத்தில், கடந்த ஜனவரி முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில், குறிப்பிடத்தக்க பல கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, 75 அடி ஆழத்தில் புராதனமான நதிப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன நதியான சரஸ்வதி ஆற்றுடன் தொல்லியல் துறையினர் தொடர்புபடுத்தி உள்ளனர். இந்த பண்டைய நதி அமைப்பு ஆரம்பகால மனித குடியேற்றங்களை ஆதரித்திருக்கலாம் என்றும், பஹாஜ் கிராமத்தை சரஸ்வதி நதிப்படுகை கலாசாரத்துடன் இணைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.இந்த அகழ்வாராய்ச்சியில், 800-க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், மண் பாண்டங்கள், பிராமி எழுத்துக்களின் பழமையான முத்திரைகள், தாமிர நாணயங்கள், யாக குண்டங்கள், மவுரியர் கால சிற்பங்கள், சிவன் மற்றும் பார்வதி சிலைகள், எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த அகழ்வாராய்ச்சி, ஹரப்பாவுக்கு பிந்தைய காலம், மகாபாரத காலம், மவுரியர் காலம், குஷானர் காலம் மற்றும் குப்தர் காலம் என, ஐந்து வெவ்வேறு காலகட்டங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பஹாஜ் பகுதி மத, கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தின் மையமாக இருந்துள்ளதை எடுத்துரைக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Siva Pandi
ஜூலை 02, 2025 07:12

இல்லாத ஊருக்கு போகாதவன் வழி சொல்ல காது கேளாதோர் கேட்டு குருடன் வழி காட்ட இரண்டு கால் இல்லாத நொண்டி உருண்டு போனான் என்ற ஒரு கதை போல் உள்ளது


Saravana Kumar
ஜூன் 30, 2025 02:56

இன்னும் ஒரே மாதத்தில் 4500 ஆண்டுகள் பழமையான விமான ஓடுதளம் கிடைக்கும்‌. அனைவரும் புல்லரிப்புக்கு தயாராகவும்


சிந்தனை
ஜூன் 29, 2025 15:17

பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் சொல்லித் தரும் வெள்ளையன் எழுதிய பொய்க் கதைகளும் பொய் வரலாறும் இனி நாற்றம் வீசத் தொடங்கும்


Mahendran Puru
ஜூன் 29, 2025 11:42

வைகை நதி கீழடி நாகரீகத்தை மறைக்க முயற்சி. அரசு விடும் கதைகளுக்கு இங்கே ஒரு கோஷ்டி தாளம் தட்டும் அவலம்.


venugopal s
ஜூன் 29, 2025 11:13

போன வருடம் புதைத்து வைத்து விட்டு இந்த வருடம் எடுத்து புராதான சின்னங்கள் என்று சங்கிகளின் நாடகம் ஆடுகின்றனர்! கீழடிக்கு போட்டியாம்!


oviya vijay
ஜூன் 29, 2025 18:43

அய்யோ இங்கே இவ்ளோ நாளா வெங்காய மண், ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார் அப்டின்னு 70 வருஷமாக உருட்டிகிட்டு இருக்கோம். இதுல இப்பிடி ஆவணங்கள் கிடைத்தால் அப்பறம் எங்களுக்கு எப்டி 200 கிட்டும்..


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 10:56

சிந்துசமவெளி கூட சரஸ்வதி நாகரீகம்தான். வெள்ளையன் அகழ்வாராய்ச்சி செய்து கற்பனை அறிக்கையளித்தது பிரித்தாளும் சூழ்ச்சியின் அங்கமே. நம்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலரும் துணை போனது வருந்தத்தக்கது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 29, 2025 08:01

போச்சு கீழடி, தமிழன், ஆரியர், திராவிடர் என்று களவாணி கழகம் பிரச்சனை ஆரம்பித்து விடுவார்கள்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 07:41

இரும்பு கூட கிடைத்தது எனப்புரிகிறது.


முக்கிய வீடியோ