உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வக்ப் திருத்த சட்டத்திற்கு முழு ஆதரவு: தமிழ் மாநில முஸ்லீம் லீக் அறிவிப்பு

வக்ப் திருத்த சட்டத்திற்கு முழு ஆதரவு: தமிழ் மாநில முஸ்லீம் லீக் அறிவிப்பு

சென்னை : “முஸ்லிம் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், வக்ப் திருத்த சட்டத்தை வரவேற்கிறோம்,” என, தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: வக்ப் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும், சட்ட ரீதியான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கவும், வக்ப் திருத்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'உம்மத்துக்கான வக்ப்' எனும் மாநில அளவிலான இயக்கத்தை துவக்கி உள்ளோம். தமிழகத்தில், பல உயர் மதிப்புள்ள வக்ப் சொத்துக்கள், சட்ட ரீதியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. பதிவு செய்யப்பட்ட வக்ப் சொத்தாக இருந்தும், சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், அவை அரசியல் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும். தமிழகம் முழுதும் உள்ள வக்ப் நிலங்களை, விரிவான 'டிஜிட்டல் அளவீடு' செய்ய, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதன் வாயிலாக, பாரம்பரிய வக்ப் சொத்துக்களை, தனி நபர்களின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். மேலும், வக்ப் சொத்துக்கள் மதம், தொண்டு மற்றும் சமூக நலன்களுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.வக்ப் திருத்த சட்டத்தை, உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். வக்ப் சர்ச்சைகளை தீர்க்க, விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்த சட்டம், பெரும் உதவியாக இருக்கும், இந்த சட்டத்தை வரவேற்பதோடு, முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் மாற்றம் நிகழும்!

தமிழகத்தில் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில், மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட தி.மு.க., தலைவர்கள், சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இவர்களின் ஊழல் மிகப்பெரியது. டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் நிலைமை, ஸ்டாலினுக்கும் வரும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் நிகழும்.- ஷேக் தாவூத்,நிறுவன தலைவர், தமிழ் மாநில முஸ்லீம் லீக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ameen
ஏப் 16, 2025 12:51

முஸ்லீம் மக்களுக்கே இப்படி ஒரு லெட்டர்பேட் கட்சி? இருப்பது தெரியாது....


RAMESH
ஏப் 16, 2025 13:44

சிறை செல்வது உறுதி.. பாட்டிலுக்கு பத்து ருபா கமிஷன் அடித்த நபர்களுடன் கூட்டணி வைத்து உள்ள லெட்டர் பேட் கட்சிகளும் தனியாக நின்றால் டெபாசிட் கிடைக்காது.பிரிவினை வாதி ஜவாருனில்லா ஆட்கள்.....


vivek
ஏப் 16, 2025 16:43

அப்போ நீ தான் டூப்ளிகேட் பாய்


Keshavan.J
ஏப் 16, 2025 17:53

லெட்டர்பேட் கட்சி இருக்கலாம் ஆனால் லெட்டர் பாடுகள் இருக்க கூடாது.


Muralidharan S
ஏப் 16, 2025 12:26

பாரத தேசப்பற்று மிக்க, உண்மையான இஸ்லாமிய தர்மத்தில் வாழும் இஸ்லாமியர்கள், மோடி அவர்கள் கொண்டுவரும் சீர்தருத்தங்களை வரவேற்கின்றனர்.. பொய்களை / அவதூறுகளை ஓட்டுக்காக பரப்பி நாட்டில் குழப்பம் விளைவிப்பது இந்திய அளவில் கான்-cross மற்றும் தமிழகத்தில் திராவிஷ கூட்டணியினர்.. தேசமுன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இந்த அரசியல் வியாதிகள்..


Madras Madra
ஏப் 16, 2025 10:41

இப்படி எல்லோரும் புரிந்து கொள்வது நாடு சுமுகமாக அமைதி வளம் பெற உதவும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 09:28

உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வக்ஃப் திருத்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள் .... முறைகேடாக அபகரித்தவர்களுக்கே இத்திருத்தத்தால் பாதகம் என்று புரிகிறது .....


Iniyan
ஏப் 16, 2025 08:53

அயோக்கிய நீதி மன்றங்கள், சட்டம் இயற்றியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. தேச விரோத நீதி மன்றங்களை விசாரிக்க எந்த உரிமையும் இல்லை.


VENKATASUBRAMANIAN
ஏப் 16, 2025 08:10

திமுக இதை வைத்து திசை திருப்ப பார்க்கிறது. அப்போதுதான் அவர்களை பற்றி பேச மாட்டார்கள். இதுதான் திமுகவின் தந்திரம். இதை புரியாத எதிர்கட்சி அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறார்கள். முதலில் அவர்களது ஊழலை வெளியே கொண்டு வாருங்கள். விஞ்ஞான ஊழலில் கெட்டிக்காரர்கள்


S.V.Srinivasan
ஏப் 16, 2025 07:22

முக்கியமந்திரி என்ன சொல்றாரு???


Minimole P C
ஏப் 16, 2025 07:19

It seems there are exceptions in Islamic persons also. Generally irespective of education and status, they always sing chorus on many matters with least regard to even national importance. Let us welcome this.


Bala
ஏப் 16, 2025 06:34

நீங்கள்தான் உண்மையான இஸ்லாமிய மக்களின் நலம் விரும்பி ஐயா. மத்திய அரசின் நல்ல நோக்கத்தை அறிந்து கொண்ட தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் வாழ்த்துக்கள். தயவு செய்து வோட்டு பிச்சைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் திமுக மற்றும் ஜோசப் விஜய் போன்றவர்களுக்கு புரிய வையுங்கள் ஐயா. உங்கள் ஆதரவு நிலைப்பாட்டை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லுங்கள் ஐயா. வாழ்க வளர்க உங்கள் இஸ்லாமிய மக்கள் தொண்டுகள்


புதிய வீடியோ