உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எத்தனை முறை தான் மக்களை ஏமாற்றுவீர்: அண்ணாமலை

எத்தனை முறை தான் மக்களை ஏமாற்றுவீர்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை பந்தல்குடி கால்வாயை துார்வார, பொதுமக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை கால்வாயை துார்வார, முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம் மதுரை பந்தல்குடி கால்வாய், 2 கி.மீ., தொலைவுக்கு துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியானது. பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நள்ளிரவில் கால்வாயை பார்வையிடுவது போல், ஒரு நாடகத்தை நடத்தி இருக்கின்றனர்.மதுரையில் பல பகுதிகள், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, பந்தல்குடி கால்வாயை துார்வாராமல் இருப்பதும் ஒரு காரணம். இதையடுத்து, 90 கோடி ரூபாய் செலவில், கால்வாயை துார்வாரி தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமைச்சர் நேரு அறிவித்தார். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.கால்வாயை துார்வார, நான்கு ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்த முதல்வர், நள்ளிரவில் சென்று பார்வையிடும் நாடகம், யாரை ஏமாற்ற; இந்த நாடகத்தால், யாருக்கு என்ன பயன்; மதுரை மக்களை முட்டாள்கள் என, முதல்வர் நினைத்து கொண்டிருக்கிறாரா?கால்வாயை துார்வார, அமைச்சர் நேரு அறிவித்த, 90 கோடி ரூபாய் திட்டம் என்ன ஆனது? எத்தனை முறைதான் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்றுவீர்கள்.- அண்ணாமலைதமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜூன் 02, 2025 20:16

எத்தனை முறை தான் மக்களை ஏமாற்றுவீர்: அண்ணாமலை? பதில்: மக்கள் ஏமாறும்வரை ஏமாற்றுவோம்: திமுக.


Velayutham rajeswaran
ஜூன் 02, 2025 14:55

தமிழகம் தூர் வாரப் பட்டு விட்டதே தனியாக கால்வாய் வேறு தூர் வார வேண்டுமா என்ன


புரொடஸ்டர்
ஜூன் 02, 2025 08:00

விளம்பரத்திற்காக கழிப்பறைகளை சுத்தம் செய்த நீ போய் தூர் வாரி விளம்பரம் செய் அண்ணாமலை.


vivek
ஜூன் 02, 2025 08:22

சாக்கடையை சுத்தம் செய்வது தவறில்லை...சட்டையை கிழித்து கொண்டு வரவில்லை


சப்போர்ட்டர்
ஜூன் 02, 2025 14:03

ஆடசியில் இல்லாத ஒரு மகத்தான தலைவர் நீங்கள் கூறுவது போல விளம்பரத்திற்கே சுத்தம் செய்தார் என்று வைத்துக் கொள்வதற்கும் ஏற்கனவே ஊழலில் ஊறிய கட்சி நான்கு வருடம் ஆட்சிப் பொறுப்பிலிருந்தும் எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குடி மக்களின் சிந்தனையில் தெளிவும் நேர்மையும் இருந்தால் தான் நல்ல ஆட்சியாளர்களை எதிர்பார்க்க முடியும்.


babu
ஜூன் 02, 2025 07:16

யார் இவர்?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 02, 2025 08:19

2026 ல் நீங்கள் கதறும் போது தெரியும்.....!!!


vivek
ஜூன் 02, 2025 08:20

இவர் தான் அடுத்த முதல்வர்


chanakyan
ஜூன் 02, 2025 14:12

யார் இவர்? வராது வந்த மாமணி. வாரிசு அல்ல, ஆனாலும் குறுகிய காலத்தில் நல்ல ஆதரவைப் பெற்ற பெரிய தலைவர். இவர் கூட்டம் சேர்க்கும் ஆள் அல்ல, ஏனென்றால் இவருக்கு சேர்ந்தது தானா சேர்ந்த கூட்டம். பஞ்ச் டயலாக் பேசுபவர் அல்ல, ஆனால் இவருக்கு தெரியாத சபஜெக்டே கிடையாது. இன்று மாநிலத் தலைவர் பதவி இல்லை. ஆனால் தன் வாழ்நாளில் என்றாவது பாரத பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை