உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தீவிரமடையும் இந்தியா - வங்கதேச பிரச்னை; எல்லைகள் நடுவே சிக்கி தவிக்கும் மக்கள்

தீவிரமடையும் இந்தியா - வங்கதேச பிரச்னை; எல்லைகள் நடுவே சிக்கி தவிக்கும் மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு பின், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பின் இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் விழத்துவங்கியது. இந்திய எதிர்ப்பு கொள்கை உடைய முகமது யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு அமைந்த பின் இந்த விரிசல் பெரிதானது.இந்தியா உடனான ராணுவ ஒப்பந்தங்களை வங்கதேசம் ரத்து செய்ததுடன், வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தியா சர்வதேச விதிமுறைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், சட்டவிரோதமாக ஊடுருவி இந்திய பகுதிகளுக்குள் தங்கியுள்ள வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் மற்றும் அண்டை நாடான மியான்மரை சேர்ந்த ரோஹிங்யா அகதிகளை நம் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் அதிகாரிகள் நாட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த நடவடிக்கையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உட்பட, 900க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். முறையான நாடு கடத்தல் நடைமுறைகள் அல்லது வங்கதேசத்துடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் இது நடந்ததாக கூறப்படுகிறது.'இந்த நடவடிக்கை, நீண்ட சட்ட செயல்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு புதிய அணுகுமுறை' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளிப்படையாக ஆதரித்தார். இருப்பினும் இது சர்வதேச சட்டத்தை மீறுவதாக விமர்சகர்கள் கண்டிக்கின்றனர். இந்தியாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இறையாண்மையை மீறுவதாகவும் கூறிய வங்கதேசம், வெளியேற்றப்பட்ட நபர்களை ஏற்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது.வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர், உள்ளூர் கிராமவாசிகளுடன் சேர்ந்து, வெளியேற்றப்பட்டவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால், நுாற்றுக்கணக்கானோர் வங்கதேசத்திற்குள் செல்ல முடியாமல், இந்தியாவுக்கும் திரும்ப முடியாமல், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள, 'ஜீரோ லைன்' என்று அழைக்கப்படும் பகுதியில் வெட்ட வெளியில் தவித்து வருகின்றனர்.இந்த நடவடிக்கையின் போது, வாக்காளர் அடையாள அட்டை, நிலப் பத்திரங்கள் உள்ளிட்ட முறையான ஆவணங்களை வைத்துள்ள இந்தியர்களும் தவறுதலாக வெளியேற்றப்பட்டு, தாக்குதலுக்கு ஆளானதாக செய்திகள் கூறுகின்றன. தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளவர்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை அணுகவோ அல்லது மேல்முறையீடு செய்யவோ உரிமை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது சிறுபான்மையினருக்கான சட்டப்பாதுகாப்பை மீறுவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.இரு நாட்டு எல்லைகளுக்கு இடையே யாருக்கும் சொந்தமில்லாத, 'நோ மேன்ஸ் லாண்ட்' என்றழைக்கப்படும் பகுதியில் சிக்கித் தவிக்கும் அகதிகள், பசி பட்டினியால் தவிப்பதுடன், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வன்முறை வெடிப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.தீவிரமடைந்து வரும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமானால், வெளியேற்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதுடன், எல்லையில் சிக்கி தவிப்போருக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும் என்ற கருத்தும் வலுக்கிறது. விரைவான இருதரப்பு பேச்சு மற்றும் சர்வதேச சட்டத்தை மதித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த பிரச்னை மேலும் தீவிரம் அடையும் என்றே தெரிகிறது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Riveris
ஜூன் 03, 2025 08:09

அவனுங்க எப்படி வெளியேறுவானுங்க. ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இவர்களை சர்வதேச சட்டப்படி எல்லாம் அணுக முடியாது. வங்காளதேசம் சொந்த நாட்டு மக்களை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எப்படி சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவிற்குள் ஊடுருவ அனுமதிக்கிறது. மேலும் இங்கே வந்து சிறுபான்மையினர் அந்தஸ்து வேறு கேட்கிறதா. அங்கேயே பெரும்பான்மையின ராக இருந்து கொள்ளையடிக்க வேண்டியது தானே. எத்தனையோ வங்கதேச இந்துக்கள் கொலை செய்யப்பட்டு கொடுமையாக தாக்கப்பட்ட போது வங்கதேச சிறுபான்மையினரை பற்றி யாரேனும் கவலை பட்டார்களா


Krishnaswame Krishnaswame
ஜூன் 01, 2025 20:24

இந்தியாவும், இந்துக்களும் பட்ட வேதனைகள் போதும். இவனுங்க கள்ளத்தனமாக உள்ள வருவானுங்க. இந்துக்களின் சொத்துக்களை அபகரிப்பானுங்க. துரத்தி விரட்டி அடிப்பதே நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது. இது உள்ளே வந்தவனுங்க எண்ணிக்கையில் 1% மட்டுமே. அவர்களை விரட்டி அடிப்பது மத்திய அரசின் கடமை. மாநிலங்களில் வேறு கட்சி ஆட்சி நடந்தாலும் மத்திய அரசு துணை ராணுவ படை கொண்டு வெளியேற்ற வேண்டும் ட்ரம்ப் நிர்வாகம் போல்.


Ramesh Sargam
ஜூன் 01, 2025 13:00

Operation Sindoor Part 2. நமது வீரர்களுக்கு மீண்டும் கொண்டாட்டம்.


Ganapathy
ஜூன் 01, 2025 01:31

நமது பத்திரிகைகள்தான் "மனித உரிமை அறிஞர்கள்" பெயரில் பொய்யான இரக்கத்தை பரப்பி நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் பாதுகாப்பையும் நாட்டின் பாதுகாப்பையும் குறைக்கின்றன. வேறு யாருக்கும் இதில் ஆட்சேபணை இல்லை.


Gopalakrishnan Thiagarajan
மே 31, 2025 22:57

இது மனிதாபிமான பிரச்சினை இல்லை. அவர்கள் திருட்டுஊடுருவிகள். தாட்ச்சமில்லாமல் துரத்தி அடிக்கபட வேண்டியவர்கள்.


Balaji Radhakrishnan
மே 31, 2025 13:55

கள்ளத்தனமாக நுழைந்த திருட்டு கேடுகெட்ட நம் இந்துக்களை கொலை கற்பழித்த இந்த மதவாதி கும்பல்களுக்கு இந்தியாவில் இடம் தரக்கூடாது. மற்ற நாட்டின் பிரதிநிதிகளின் பேச்சை கேட்க கூடாது.


SP
மே 31, 2025 10:03

நன்றிகெட்ட வங்கதேசம்தான் பொறுப்பேற்க வேண்டும்.


Dharmavaan
மே 31, 2025 08:39

கள்ள குடியேறிகலுக்கு தேசத்துரோகிகள் ஆதரவு. இரும்பு கரம் கொண்டுஒடுக்க வேண்டும்


சூரியா
மே 31, 2025 08:23

இந்த மனிதாபமான செயல் அனைத்தையும் இந்தியாதான் செய்யவேண்டும் என நிர்பந்திப்பது தவறு.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 31, 2025 10:23

மிக சரி Mr.Surya.....இந்தியாவை ஏன் நிர்பந்திக்க வேண்டும்....முறையே அவர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்.... அவர்கள் நாட்டில் சேர்த்து கொள்ள உலக நாடுகள் அவர்களை தான் நிர்பந்திக்க வேண்டும் மாறாக இந்தியாவை நிர்பந்திப்பது அளவுக்கு மீறிய பொறுமையை, நியாயம், தர்மம், சர்வதேச பயத்தை இந்தியா கடைப்பிடிப்பதால் உலக நாடுகளுக்கெல்லாம் இந்தியாவை கண்டால் இளக்காரமாக தெரிகிறது.....உ.ம்....அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கையில் விலங்கிட்டு நாடு கடத்தும் போது எந்த தேசமும் அமெரிக்காவை நிர்பந்திக்க வில்லை...தற்போது போர் புரிந்து வரும் ரஷ்யாவும், இஸ்ரேலும் நாங்கள் நியாயத்தையும், தர்மத்தையும் கடைபிடிக்கிறோம் என்று உலக நாடுகளுக்கு தூதுக்குழு அனுப்பவில்லை....பிறகு ஏன் இந்தியா மட்டும் இதை செய்ய வேண்டும்..... பண்டைய காலத்தில் ஆன்மீகம் நியாயம் தர்மம் என்று வாழ்ந்து பிறகு ஆயிரமாண்டுகளுக்கு மேலாக முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமைபட்டு வாழ்ந்ததினால் கோழைத்தனம் என்பது இந்தியர்கள் ரத்தத்தில் ஊறி விட்டதோ என்னவோ....!!!