உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஏஐ பயன்பாட்டில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

ஏஐ பயன்பாட்டில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

நமது சிறப்பு நிருபர்டில்லியில் நடைபெறும் 'இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட்' மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று, பல சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங் களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாநாட்டில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கான உறுதிமொழியை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் எடுத்தனர். இது கின்னஸ் சாதனை பட்டி யலில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய முக்கிய நிகழ்வுகள்:

'குவால்காம்' ரூ.1,365 கோடி முதலீடு

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஏ.ஐ., மற்றும் தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை ஊக்குவிக்க, சிப் தயாரிப்பு நிறுவனமான 'குவால்காம்' கிட்டத்தட்ட 1,365 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த முதலீடானது 'குவால்காம் வென்ச்சர்ஸ்' என்ற துணை நிறுவனம் வாயிலாக, வாகனம், இன்டர்நெட் ஆப் திங்ஸ், ரோபோடிக்ஸ் மற்றும் மொபைல் சார்ந்த ஏ.ஐ., தொழில்நுட்பங்களை உருவாக்கும் பல்வேறு நிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மைக்ரோசாப்ட்' ரூ.4.55 லட்சம் கோடி முதலீடு

உலகளவில் ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாட்டில் உள்ள இடைவெளியை குறைக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் வரும் 2030க்குள் 4.55 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளில் ஏ.ஐ., பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதாக தெரி வித்துள்ள இந்நிறுவனம், உட்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, உள்ளூர் கண்டுபிடிப்புகள் மற்றும் பன்மொழி ஏ.ஐ., உருவாக்கத்தில் முதலீடு செய்ய உள் ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை முந்தும் இந்தியா

அடுத்த 10 ஆண்டுகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், அமெரிக்காவை விட இந்தியா அதிவேகமாக செயல்படும் என 'ஜோஹோ' நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்து உள்ளார். ஏ.ஐ., மாநாட்டில் பேசிய அவர், இந்திய இளைஞர்களின் நேர்மறையான எண்ணமே இதற்கு முக்கிய காரணம் என்றார்.இந்தியாவில் யு.பி.ஐ., மற்றும் பைபர் ஆப்டிக் தொழில்நுட்பங்கள் பெருமளவில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய அவர், புதிய தொழில்நுட்பங் களை ஏற்றுக்கொள்வதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

திருடு போனவற்றை மீட்ட டில்லி போலீஸ்

ஏ.ஐ., மாநாட்டில் திருடப்பட்ட பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கருவிகள் டில்லி போலீசால் மீட்கப்பட்டு உ ள்ளன. மாநாட்டின் முதல் நாள் அன்று, பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக அரங்குகள் காலி செய்யப்பட்டன.அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் காப்புரிமை பெற்ற ஏ.ஐ., கருவிகள் திருடப்பட்டன . அவை மீட்கப்பட்டது.Gallery

பிப்., 21 வரை நீட்டிப்பு

மாநாட்டுக்கு இன்று பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இதற்கு பதிலாக பிப்., 21ம் தேதி கூடுதலாக ஒரு நாள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய அமர்வு இன்று நடைபெறுகிறது.“முக்கிய விருந்தினர்கள் வருகை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடு களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவே இன்றைய தினம் கண்காட்சி மூடப்படுகிறது,” என, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை